Vijay’s Rally Stampede: விஜய் பரப்புரையில் நடந்த அதிபயங்கர சோகம்.. கரூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
TVK Vijay's Rally Stampede: வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தவெக விஜய் பரப்புரை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Vijay) கரூரில் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் மயக்கமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) கரூர் விரைகிறார். வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
ALSO READ: திமுகவுக்கு ஏடிஎமாக செயல்படும் முன்னாள் அமைச்சர் – கரூரில் மறைமுகமாக விமர்சனம் செய்த விஜய்..
என்ன நடந்தது..?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த சில வாரங்களாக சனிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், 2025 செப்டம்பர் 27ம் தேதியான இன்றும் தவெக தலைவர் விஜய், காலையில் நாமக்கல் மாவட்டத்திலும், மாலை நேரத்தில் கரூரிலும் பரப்புரை மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் மாலை விஜயை காண அதிக அளவிலான தொண்டர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. மேலும், தொண்டர்கள் அதிகமாக கூடியதால் சில இடங்களில் காவல்துறையினர் தடியடியும் நடத்தினர்.
இப்படியான சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் கூட்டம் அதிகரித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர். சிறிது நேரத்தில் உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாக தொடங்கியது. மயக்கமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ALSO READ: விஜயின் கரூர் பிரச்சாரம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சோகம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்:
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் – மாவட்ட…— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 27, 2025
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் அடிப்படையில், இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது மாதிரியான அவசர சூழ்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நபர்களை காண கரூர் விரைகிறார். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட ஆட்சியரை சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கரூர் விரைந்து செல்லுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.