தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்.. தீவிர கட்டுப்பாடுகள்!

TVK Executive Meeting In Tanjore | தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அந்த கட்சியின் தலைவர் விஜய் தலைமை ஏற்க உள்ளார். இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்.. தீவிர கட்டுப்பாடுகள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Mar 2026 08:05 AM

 IST

அய்யாச்சாமிபட்டி, மார்ச் 04 : தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய், தஞ்சாவூர் அருகே இன்று (மார்ச் 04, 2026) நடைபெற உள்ள நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். கியூஆர் கோட் உடன் கூடிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த கூட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூரில் விஜய் தலைமையில் நடைபெற உள்ள தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கட்சிகள் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் பல்வேறு சந்திப்புகள் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக தவெக தலைவர் விஜய் பொதுமக்களை சந்தித்து வந்த நிலையில், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பொதுமக்கள் கூட்டம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாறியுள்ளது. அந்த வகையில், இன்று  தஞ்சாவூரில் நடைபெற உள்ள நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.

இதையும் படிங்க : திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!

அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதி

தஞ்சாவூரில் நடைபெற உள்ள இந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜய், தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க கியூஆர் கோட் உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சுமார் 4,900 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Udhayanidhi Stalin Tamil Nadu Election: முதல் தேர்தலில் அமோக வெற்றி… குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

வெயில் காரணமாக மேற்கூரை மற்றும் நாற்காலிகள் வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துக்கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர கூட்டத்தை பாதுகாப்பான முறையில் நடத்த தெவக சார்பில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெக தலைவர் விஜயை காண ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் எங்கு போலீசார் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ