இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. கொதித்தெழுந்த படக்குழு.. அதிரடியில் இறங்கிய சைபர் கிரைம்!

Janyayan Release : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக படக் குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில், இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. கொதித்தெழுந்த படக்குழு.. அதிரடியில் இறங்கிய சைபர் கிரைம்!

ஜனநாயகன் லீக் விவகாரத்தில் போலீஸ் விசாரணை

Published: 

11 Apr 2026 15:25 PM

 IST

தமிழக திரை உலகில் உச்சபட்ச நடிகர் ஆக இருந்து வந்த விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனால், திரைத்துறையில் கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஜனநாயகன் பட குழு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்த அரசியல் சார்ந்த படமாக இருக்கும் காரணத்தால், அந்த படம் வெளியாவதில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இணையதளத்தில் வெளியான ஜனநாயகன் படம்

ஆனால், அதிலும் ஜனநாயகன்படம் வெளியாவதில் இடையூறு இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மே 2- ஆவது வாரத்தில் ஜனநாயகம் படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. இந்த நிலையில், நேற்று 3 மணி நேரம் கொண்ட ஜனநாயகம் படம் மர்ம நபர்களால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனால், ஜனநாயகன்பட குழுவினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மேலும் படிக்க: யார் வந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது.. 234 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் – திமுக தலைவர் ஸ்டாலின்..

சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

ஜனநாயகன்படம் இணையதளத்தில் வெளியானதற்கு திரை துறையினரும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதே போல, ஜனநாயகன் பட தயாரிப்பாளரும், ஜனநாயகன்பட காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் இணையவழி குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அரசியல் ரீதியான நெருக்கடி

அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனநாயகன்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரையில் ஜனநாயகன் படம் வெளியாவதில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டு சேர்ந்து இடையூறு ஏற்படுத்திய வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதே நேரத்தில், தேர்தலில் விஜய்க்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில் காலம் தாழ்த்தி வருவதாகவும், அரசியல் ரீதியாக இந்த நெருக்கடி அளித்து வருவதாகவும் தவகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: “அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!

Follow Us
Related Stories
துரோகம் பாஜவுக்கு பழக்கம்… துணை போவது அதிமுகவுக்கு வழக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அட்டாக்!
ஒரு புறம் மநீம தலைவர் கமல்ஹாசன்… மறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ்.. சூறாவளி பிரசாரம் பயண திட்டம்!
தேர்தல் ஆணையம் “யு-டர்ன்”.. மீண்டும் ஊழல் தடுப்பு டிஜிபியாகும் டேவிட்சன்.. என்ன காரணம்?
தலைமை செயலர் – டிஜிபி வரிசையில் உள்துறை செயலர் மாற்றம்.. கோட்டையில் அதிரும் புதிய நியமனங்கள்!
“அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!
தேர்தலுக்கு பின் திமுக சிதறும்.. “கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்”.. புயலை கிளப்பிய அண்ணாமலை!!
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?