Vijay Speech: உங்களை நம்பி நான்.. ஜெயலலிதாவின் டயலாக்.. விஜய் உரையின் டாப் 10 பாய்ண்ட்ஸ்!
Tvk Vijay's speech at erode: சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோட்டில் விஜய்
ஈரோடு, டிசம்பர் 18: நாங்கள் அண்ணா, எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவதை யாரும் கேட்க முடியாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஈரோடு பெருந்துறை அருகே நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மஞ்சள் என்றாலே வைப் தான். நல்ல காரியத்தை தொடங்கும் முன் மஞ்சள் வைத்து தான் தொடங்குவார்கள். மஞ்சள் என்றாலே அதிர்வு தான், நமது கட்சிக்கொடியில் கூட மஞ்சள் நிறம் உள்ளது. அப்படி மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி ஈரோடு மண், விவசாயத்துக்கு பெயர் போன மண் ஈரோடு, இங்கு மஞ்சள் குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியும்” எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.
எனக்காக இறுதிவரை நிற்பீர்களா?
நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு வயது 10, அப்போதில் இருந்து எனக்கும் உங்களுக்கும் உறவு உள்ளது. எல்லாத்தையும் விட்டு விட்டு வந்த இந்த விஜய்யை, விஜியை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்னை கைவிட்டு விடாதீர்கள். எனக்காக இறுதிவரை நிற்பீர்களா? நானும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என்றார்.
அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழகத்தின் சொத்து:
அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். அவர்களிடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக் கொண்டோம். பெரியாரே எங்கள் கொள்கை முன்னோடி. அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அண்ணா பெயரை பயன்படுத்துவதை யாரும் கேட்க முடியாது.
தவெகவை பார்த்து ஏன் கதறுகிறீர்கள்?
உங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லைதானே. பின் ஏன் கதறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை என்றார். அதோடு, பொது வாழ்க்கையில் இருந்தபோதும் ஒரு பைசா சம்பாதிக்காதவர் பெரியார் என்றும் கூறிய அவர், அப்படிப்பட்ட பெரியார் பெயரை கூறி கொள்ளையடிக்காதீர்கள் என்றும் விமர்சித்தார்.
இன்றைய விஜய் உரையில் டாப் 10 பாய்ண்ட்ஸ்:
#தீயசக்தி_திமுக pic.twitter.com/FdLbAMIdr2
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) December 18, 2025
1. உங்களை நம்பிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்னை கைவிட்டு விடாதீர்கள். எனக்காக இறுதிவரை நிற்பீர்களா? நானும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
2. பொது வாழ்க்கையில் இருந்தபோதும் ஒரு பைசா சம்பாதிக்காதவர் பெரியார். தந்தை பெரியாரின் பெயரைக் கூறிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
3. அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
4. தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லைதானே. பின் ஏன் கதறுகிறீர்கள்?
5. நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்லி அசிங்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
6. உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை.
7. 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். நீங்கள் கேட்பதற்காக எலாம் களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது.
8. எங்கள் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பது தவெக தொண்டர்களுக்கு தெரியும்.
9. எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி, TVK ஒரு தூய சக்தி.
10. செங்கோட்டையன் நம்முடன் சேர்ந்தது கூடுதல் பலம். இவரைப் போல நம்முடன் பலர் வந்து சேரப்போகிறார்கள்.