TVK Vijay: ஆட்சி அமைக்க கிடைத்த பெரும்பான்மை.. ஆளுநரிடம் கிடைக்காத நேரம்.. வீடு திரும்பிய தவெக விஜய்!

TVK Alliance: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு 118க்கு மேற்பட்ட இடங்களுக்கான பெரும்பான்மை கிடைத்த நிலையில், விஜய்யை சந்திக்க ஆளுநர் நேரம் கொடுக்காததன் காரணமாக நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட  தவெக தலைவர் விஜய் மீண்டும் யுடர்ன் அடித்து வீடு திரும்பினார்.

TVK Vijay: ஆட்சி அமைக்க கிடைத்த பெரும்பான்மை.. ஆளுநரிடம் கிடைக்காத நேரம்.. வீடு திரும்பிய தவெக விஜய்!

ஆளுநருடன் தவெக தலைவர் விஜய்

Updated On: 

09 May 2026 18:25 PM

 IST

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு (Tamilaga Vettri Kazhagam) 118க்கு மேற்பட்ட இடங்களுக்கான பெரும்பான்மை கிடைத்த நிலையில், விஜய்யை சந்திக்க ஆளுநர் நேரம் கொடுக்காததன் காரணமாக நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட  தவெக தலைவர் விஜய் மீண்டும் யுடர்ன் அடித்து பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு திரும்பினார். தேவையான எண்ணிக்கையிலான ஆதரவைப் பெற்ற பிறகு, புதிய அரசை அமைப்பதற்கான உரிமையைக் கோருவதற்காக, ஆளுநர் அர்லேகரைச் சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Vijay) மக்கள் பவனுக்கு உடனடியாக புறப்பட்டார். இருப்பினும், 2026 மே 9ம் தேதியான இன்று இரவு 7.30 மணியளவில் கேரளா செல்ல இருப்பதால் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் நேரம் ஒதுக்காததால், விஜய் வீடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ALSO READ: அதிமுகவுக்கு ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை – எம்.ஏ.பேபி விளக்கம்

ஆட்சி அமைக்க கிடைத்த பெரும்பான்மை:


தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, விசிக தலைவர் திருமாவளவன், த.வே.க-விடம் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதன் மூலம், தமிழக வெற்றி கழகத்திற்கு (108) தற்போது காங்கிரஸ் (4), CPI, CPI(M) (4) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (2) ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் தவெக பலம் 119-ஆக உயர்ந்து, 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.

ALSO READ: ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

நாளை கடிதம் கொடுக்க அழைப்பு:


கேரளம் செல்வதாக இருந்த ஆளுநர் அர்லேக்கரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க புறப்பட்டுள்ளார்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி