திமுகவும்-அதிமுகவும் பங்காளிகள்…தவெக நிர்மல் குமார் அட்டாக்!

C T R Nirmal Kumar Criticized DMK And AIADMK: திராவிட முன்னேற்றக் கழகமும், அதிமுகவும் பங்காளிகள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் கடும் விமர்சனம் செய்து உள்ளார்.

திமுகவும்-அதிமுகவும் பங்காளிகள்...தவெக நிர்மல் குமார் அட்டாக்!

Nirmal Kumar

Published: 

22 Dec 2025 14:15 PM

 IST

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுகவை தீய சக்தி என்று தவெக தலைவர் விஜய் கூறியதற்கு, அதிமுகவை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் அவர்கள் பகுதிகளில் உள்ள திமுக அமைச்சர்கள் பற்றி விமர்சிப்பது கிடையாது. திமுக அமைச்சர்களான துரை முருகன், காந்தி ஆகியோர் பற்றியோ, அவர்கள் செய்த ஊழல் பற்றியோ கே.பி. முனுசாமி விமர்சித்தது கிடையாது. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தினர் திமுகவை விமர்சித்தால், அதற்கு அதிமுகவினர் பதில் அளிப்பது ஆச்சரியமாக உள்ளது.

வெட்ட வெளிச்சமான திமுக-அதிமுக உறவு

இதனால், திமுக மற்றும் அதிமுக இடையே உள்ள உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக அமைச்சர்களுடன், அதிமுக மூத்த தலைவர்கள் பங்காளிகளாக உள்ளனர். இது தற்போது, தமிழக மக்களுக்கு தெரிய வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்களான எம். ஜி. ஆர். ஜெயலலிதா காலத்துக்கு பிறகு தி மு க எதிர்ப்பை எப்போது அதிமுகவினர் கைவிட்டார்களோ, அப்போதே, அதிமுக மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறைய தொடங்கி விட்டது.

மேலும் படிக்க: நல்லது செய்ய அரசியல் வேண்டாம்.. நடிகர்களை குறிப்பிட்ட சிவராஜ்குமார்.. கொதிக்கும் தவெகவினர்!

தீய சக்தி திமுகவை ஒழிக்கும் ஒரே தலைவர் விஜய்

அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மூர்த்தி ஆகியோர் குறித்து அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட  பேச மாட்டார்கள். தி மு கவுக்கு எதிராக, திமுக என்ற தீய சக்தியை ஒழிக்கும் ஒரே தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருப்பார். அ. தி. மு. க. பொதுக் குழுவில் சில கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த ஒரு வாரத்தில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.

விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகள்

எனவே, எடப்பாடி பழனிசாமி தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்கக்கூடிய ஒத்த கருத்துடைய எந்த கட்சியினர் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம். திமுகவுக்கு எதிர்ப்பாக, திமுகவுக்கு எதிர்க் கட்சியாக உறுதியாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் என்று தெரிவித்தார். தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும், ஆட்சியில் பங்கு என்றும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை தவெக தனித்து விடப்பட்ட  கட்சியாக உள்ளது.

மேலும் படிக்க: “பொறாமையால் பாதிக்கப்பட்ட இளைஞன்”.. குட்டி கதை சொன்ன விஜய்

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை