பதட்டத்திற்கு இடையில் டெல்லி விரைந்த ஆதவ் அர்ஜுனா.. என்ன காரணம்?
Aadhav Arjuna Delhi Visit: கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், அலுவல் பணிகளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பும் காரணமாக தான் டெல்லி சென்றதாகக் கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 1, 2025: தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா, அலுவல் பணி காரணமாக டெல்லிக்கு புறப்பட்டார் என கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் அவர் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதே நேரத்தில், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தையொட்டி ஆதார் அர்ஜுனாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. இப்படியொரு சூழலில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேச்சுபொருளாக மாறியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரம்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 முதல் மாவட்டம்தோறும் மக்களிடம் உரையாற்றி வருகிறார். செப்டம்பர் 13 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20 அன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் நடத்தினார். பின்னர் செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.. திருவண்ணாமலை சம்பவம் குறித்து தலைவர்கள் கண்டனம்..
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு:
கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனிநபர் விசாரணைக் குழு, கரூர் நீதிமன்றம், காவல்துறை என பல தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி விரைந்த ஆதவ் அர்ஜுனா:
இந்த நிகழ்வுக்காக பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஆதார் அர்ஜுனா தனது எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பதிவில், “சாலையில் நடந்தாலே தடியடி, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தாலே கைது! இலங்கையிலும் நேபாளத்திலும் இளைஞர்கள் ஒன்று கூடி அதிகாரத்திற்கு எதிராக புரட்சியை உருவாக்கினார்கள். அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சியே ஆட்சி மாற்றத்திற்கும் அரச பயங்கரவாதத்திற்கும் முடிவுரையாக இருக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு.. தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு..
இந்த பதிவு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, ஆதார் அர்ஜுனா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், தேர்தல் பிரச்சார பேருந்தின் கேமரா காட்சிகளை ஒப்படைக்க அவர் மீது போலீசார் சம்மனும் அனுப்பியுள்ளனர். இத்தகைய சூழலில், அலுவல் பணிகளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பும் காரணமாக தான் டெல்லி சென்றதாகக் கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.