பிரதமர் மோடி வருகை – மதுரையில் நாளை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
Traffic Diversions In Madurai : மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மார்ச் 1, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். இதனையடுத்து மதுரையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை
மதுரை, பிப்ரவரி 28 : மதுரையில் பிப்ரவரி 28, 2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மார்ச் 1, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28, 2026 இன்று இரவு தமிழ்நாடு வரவிருக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த பொதுக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மதுரையில் முக்கிய இடங்களில் மார்ச் 1, 2026 காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மதுரையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
மதுரையில் பிரமதர் மோடி வருகைதரவுள்ளதை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி மார்ச் 1, 2026 அன்று காலை முதல் ஏற்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து பார்க்கலாம்.
வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட இடங்கள்
அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பில் இருந்து விரகனூர் ரவுண்டானா சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் முதல் பெருங்குடி சந்திப்பில் அவனியாபுரம் பைபாஸ் ரோடு மற்றும் அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் ரோடு வரை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : தகுதி இருந்தும் அரசின் இலவச லேப்டாப் கிடைக்கவில்லையா?.. விண்ணப்பிப்பது எப்படி?
கனகர வாகனங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள்
மதுரை கப்பலூர் சாலை சந்திப்பில் இருந்து அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாக மேலூர் சந்திப்பிற்கும், மேலுார் சந்திப்பில் இருந்து அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாக கப்பலூர் பாலம் சந்திப்பிற்கும் செல்ல காலை 6 மணி முதல் இரவு வரை கனகர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சியில் இருந்து மேலூர் மார்க்கமாக மதுரை அருப்புக்கோட்டை ரிங்ரோடு கப்பலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனகர சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூர் 4 வழிசாலை சந்திப்பில் இருந்து அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர் வழியாக தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி சமயநல்லூர், துவரிமான கப்பலூர் பாலம் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து கப்பலூர் பாலம் சந்திப்பு, அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பு வழியாக திருச்சி, திருமங்கலம், கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங்ரோடு வழியாக நாகமலை புதுக்கோட்டை சந்திப்பு சென்று அங்கிருந்து சமயநல்லூர், தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று அங்கிருந்து அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் வழியாக திருச்சி செல்ல வேண்டும்.
தூத்துக்குடி, அருப்புக்கோட்டை பகுதிகளில் இருந்து விரகனூர் ரிங் ரோடு வழியாக சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்கள் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்று கள்ளிக்குடி , திருமங்கலம் கப்பலூர் சந்திப்பில் இருந்து ரிங் ரோடு வழியாக நாகமலை புதுக்கோட்டை சந்திப்பு அங்கிருந்து தனிச்சியம் பிரிவு சென்று அலங்காநல்லூர், அழகர் கோவில், மேலூர் வழியாக திருச்சி செல்ல வேண்டும்.
இதையும் படிக்க : அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!
பொது போக்குவரத்து வழித்தடங்கள்
- கப்பலூர் சந்திப்பில் இருந்து விரகனூர் ரிங் ரோடு சந்திப்பு மற்றும் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழதித்டமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பில் இருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு மற்றும் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரை எந்த ஒரு வாகனும் செல்ல அனுமதி இல்லை.
- அதே போல மாட்டுத்தாவனியில் இருந்து விரகனூர் ரிங் ரோடு கப்பலூர் வழியாக விருது நகர் கன்னியாகுமரி தென்காசி, தேனி மாவட்டங்ககளுக்கு செல்லக் கூடிய அரசு தனியார் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் அனைத்தும் மதுரை கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு குருவிக்காரன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கபடி ரவுண்டானா சென்று பாத்திமா கல்லூரி சந்திப்பு வழியாக சமயநல்லூர் சென்று இடதுபுறம் திரும்பி துவரிமான் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலை சந்திப்பு, கப்பலூர் பாலம் சந்திப்பு வழியாக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மேலும் பெரியார் பஸ்டாண்டில் இருந்து திருமங்கலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் சாலையை தவிர்த்து அரசரடி, காளவாசல் சந்திப்பு வழியாக நாகமலை புதுக்கோட்டை ரிங்ரோட்டில் இடதுபுறம் திரும்பி கப்பலூர் வழியாக திருமங்கலத்திற்கு செல்லலாம். மேலும் திருமலங்கலத்தில் இருந்து பெரியார் செல்லவும் இதே வழித்தடத்தை பயன்படுத்தலாம்.
- கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து, மண்டேலாநகர் சந்திப்பு, விரகனூர் சந்திப்பு மற்றும் பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி செல்லக்கூடிய வாகனங்கள் கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து தனக்கன்குளம் சந்திப்பு, நாகமலைபுதுக்கோட்டை 4 வழிச்சாலை சந்திப்பு, துவரிமான் ரோடு சந்திப்பு வந்து வலதுபுறம் திரும்பி காளவாசல், பாத்திமா கல்லூரி, கபடி ரவுண்டானா, எம்.எம்.லாட்ஜ், ஆவின் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
- அதே போல, தூத்துக்குடி, காரியாபட்டி பகுதிகளில் இருந்து அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு, விரகனூர் சந்திப்பு, பாண்டிகோவில் வழியாக மாட்டுத்தாவணி செல்லக்கூடிய வாகனங்கள் காரியாபட்டி, நடுக்குளம், எம்.ஆலங்குளம், பொட்டப்பாளையம் சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு வந்து வலதுபுறம் திரும்பி விரகனூர் ரோடு சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கும், சிந்தாமணி சந்திப்பு வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட் இருக்கும் செல்ல வேண்டும்.
- மேலும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விரகனூர் சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு, அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு வழியாக காரியாபட்டி, தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ராமநாதபுரம் ரோடு, மணலூர் சந்திப்பு, கீழடி சந்திப்பு, கொந்தகை சந்திப்பு, பொட்டப்பாளையம் சந்திப்பு எம்.ஆலங்குளம், நடுக்குளம் வழியாக காரியாபட்டி, தூத்துக்குடிக்கு செல்ல வேண்டும்.
- *பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்துதெற்குவாசல் சந்திப்பு, அவனியாபுரம் வழியாக காரியாபட்டி, வலையங்குளம் செல்லும் வாகனங்கள் தெற்குமாரட் வீதி, மஹால் ரோடு, செயின்ட் மேரீஸ் சந்திப்பு, சிந்தாமணி ரோடு, பனையூர், பொட்டப்பாளையம் சந்திப்பு, எம்.ஆலங்குளம், சோளங்குருணி வழியாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.