தமிழகத்தில் 2,833 காவலர் பணியிடங்கள்.. தேர்வு தேதி அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

TNUSRB Recruitment 2025 : தமிழக காவல்துறை காலியாக உள்ள 2,883 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தள்ளது. இதற்கான விண்ணப்பம் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், எழுத்துத் தேர்வு 2025 நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2,833 காவலர் பணியிடங்கள்.. தேர்வு தேதி அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

Updated On: 

21 Aug 2025 09:51 AM

சென்னை, ஆகஸ்ட் 21 :  தமிழகத்தில் 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புதற்கான (TNUSRB Recruitment 2025) அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்ளுக்கான எழுத்துத் தேர்வு 2025 நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளதுதமிழக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் முதல் பலரும் முயற்சித்து வருகின்றனர். காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. காவல்துறையில் காவல்ர்கள், காவல் ஆய்வாளர், சிறைக்காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

ஆண்டுதோறும் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, காவல்துறையில் 2,833 பணியிடங்களும், சிறைக்காவலர்கள் பணிக்கு 180 பணியிடங்களும், தீயணைப்பு மற்றும மீட்புப் பணிகள் துறையில் 631 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. எனவே, இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Also Read : ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் மாற்றம்.. எப்போது? வெளியான அதிகாரப்பூர்வு அறிவிப்பு

தமிழகத்தில் 2,833 காவலர் பணியிடங்கள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2025 செப்டம்பர் 21ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள 2025 செப்டம்பர் 25ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 2025 நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும என அறிவிக்கப்பட்டுள்ளது.  காவலர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2025-ன்படி, 18 வயது நிறைந்தவர்களாகவும், 26 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஅரசு விதிகளின்படி, பல்வேறு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : TET தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

தேர்வர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, கல்விச் சான்றிதழ், ஆதார் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.