டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி? முழு விவரம் இதோ!

TNPSC Group 5A Exam : குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 5 ஏ தேர்வுக்கு 2025 அக்டோபர் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதுகுறித்து கூடுதல் விவரங்களை பார்ப்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி? முழு விவரம் இதோ!

குரூப் 5ஏ தேர்வு

Updated On: 

08 Oct 2025 09:09 AM

 IST

சென்னை, அக்டோபர் 08 : குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 5 ஏ தேர்வுக்கு 2025 அக்டோபர் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் 32 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கான குரூப் வாரியாக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகள் ஆட்கள் அமர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. உதவிப் பிரிவு அலுவலர் (தலைமைச் செயலகம்) , உதவிப் பிரிவு (நிதி), உதவியாளர் (தலைமைச் செயலகம்), உதவியாளர் (நிதி) ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 32 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பானது 35 ஆகும். பட்டியலின, பழங்குடி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதோனும் ஒரு டிகிரி அல்லது இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பணியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு இளநிலை பட்டம், இளநிலை பட்டம் பெற்ற பிறகு, தமிழக அமைச்சுப் பணியிலோ அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியிலோ, இளநிலை உதவியாளராகவோ அல்லது உதவியாளராகவோ இரண்டு பதவிகளுக்கு சேர்த்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Also Read :  வேளாண் படிப்புகளுக்கு போட்டித் தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு

குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


மேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். தாள் ஒன்று மற்றும் இரண்டில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், பணி அனுபவத்தின் அடிப்படையிலும், பணிக்கு அமர்த்தப்படுவார்கள். குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது. தேர்வர்கள் 2025 நவம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : குரூப் 2 தேர்வுக்கு கட்டுப்பாடு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு 2025 நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், தாள் 1 தேர்வு பொதுத் தமிழ் 2025 டிசம்பவர் 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், தாள் 2 பொது ஆங்கிலம் தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.