கலைஞர் கனவு இல்லம்.. கூடுதலாக 1 லட்சம் வீடுகள்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்

kalaignar kanavu illam: 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரிட் வீடுகளை அமைத்து குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம். வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டதின் கீழ் இதுவரை 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கலைஞர் கனவு இல்லம்.. கூடுதலாக 1 லட்சம் வீடுகள்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்

தங்கம் தென்னரசு

Published: 

17 Feb 2026 10:27 AM

 IST

சென்னை, பிப்ரவரி 17: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

அதன்படி, ஊரக வளர்ச்சியின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரிட் வீடுகளை அமைத்து குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம். வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டதின் கீழ் இதுவரை 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 29,000 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அண்மையில் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், 2001ம் ஆண்டு வரை அரசால் கட்டி முடிக்கப்பட்ட 1,14,488 வீடுகள் ரூ.969 கோடிகள் செலவில் புனரமைக்கப்பட்டு பழுது பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!