தென்காசி விபத்து.. தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு

TN Govt Extends Help : தென்காசியில் கடந்த நவம்பர் 24, 2025 அன்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்காசி விபத்து.. தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை - முதல்வர் அறிவிப்பு

பார்வை மாற்றுத் திறனாளி கீர்த்திகாவுக்கு அரசு வேலை

Updated On: 

26 Nov 2025 18:27 PM

 IST

சென்னை, நவம்பர் 26: தென்காசியில் (Tenkasi) கடந்த நவம்பர் 24, 2025 அன்று நடந்த சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்தில் தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), பார்வை மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவருக்கான பணி ஆணை விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கடந்த நவம்பர் 24, 2025 அன்று கோவில்பட்டியில் இருந்து தென்காசியின் திருமலை நோக்கி சென்ற தனியார் பேருந்தும், தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற மற்றொரு தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிக்க : வங்கக்கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா? வானிலை ரிப்போர்ட்.

படுகாயமடைந்த பலரும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகள் அதிவேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்தார்.

வேலைக்கான உத்தரவை வழங்கிய தென்காசி கலெக்டர்

இதையும் படிக்க : 23 வகையான தோட்டங்கள், 2000 ரோஜா வகைகள், விளையாட்டு திடல்.. அதிநவீன வசதிகளுடன் கோவையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா..

இந்த நிலையில், இந்த விபத்தில் மல்லிகா என்பவரும் உயிரிழந்தார். இந்த நிலையில் தாயை இழந்து தவிக்கும் மல்லிகாவின் மகள் பார்வை மாற்றுத்திறனாளி கீர்த்திகாவுக்கு தமிழக அரசு சார்பில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தார். மேலும் கீர்த்திகாவிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில், புளியங்குடி நகராட்சியில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான ஆணையினை தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார். கீர்த்திகாவின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவர் தாயின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தாயை இழந்து ஆதரவற்று இருந்த அவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!
வங்கக்கடலில் உருவாகும் சென்யார் புயல்.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை