திமுக – அதிமுக இணைந்து உரிமை கோரினால் ஏற்க தயார் – தமிழக ஆளுநர் பரபரப்பு பேட்டி
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திமுக அதிமுக இணைந்து பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வந்தாலும் ஏற்கத் தயார் என பேசினார். மேலும் பேசிய அவர், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான். எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது என்று பேசினார்.

தமிழக ஆளுநர்
புதுச்சேரி, மே 7 : ஆட்சியமைக்க உரிமைகோரி தவெக ஆளுநரை சந்தித்த நிலையில், அந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திமுக அதிமுக இணைந்து பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வந்தாலும் ஏற்கத் தயார் என பேசினார். மேலும் பேசிய அவர், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான். எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது என்று பேசினார்.
தமிழக ஆளுநர் பரபரப்பு பேட்டி
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆட்சியமைக்க திமுக, அதிமுக இணைந்து வந்தாலும் ஏற்கத் தயாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பெரும்பான்மைக்கு உரிய ஆதாரங்களுடன் எந்தக் கட்சி வந்தாலும் அதை ஏற்று பரிசீலிப்பேன். உண்மையாக இருந்தால் ஏற்பேன் என்றார்.
இதையும் படிக்க : எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய்? டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்
மேலும் பேசிய அவர், ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் கடிதம் அனுப்பி உள்ளார். மெஜாரிட்டியாக 35 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளதாக விஜய் கூறியுள்ளார். எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என கேட்டுள்ளேன். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு என பல ஆப்ஷன்கள் உள்ளன. அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு முடிவு எடுப்பேன். குறிப்பிட்ட காலத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்தரவிடலாம் என்று பேசினார்.
திமுக மற்றும் அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான். எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது என்று பேசினார்.
மற்றொரு பக்கம் புதுச்சேரியில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பொறுமையாக இருங்கள், அதிமுக ஆட்சி அமைவது உறுதி என பேசியிருந்தார். மேலும் திமுக எம்எல்ஏ கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மே 10, 2026 வரை சென்னையிலேயே இருக்குமாறு தனது கட்சி எம்எல்ஏகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தலைமை எடுக்கும் முடிவை ஏற்க வேண்டும் எனவும் தனது கட்சி எம்எல்ஏகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
அதிமுக – திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் அதன் காரணமாகவே இரண்டு கட்சிகளும் அவசர எம்எல்ஏகள் கூட்டத்தை நடத்தியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படி அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.