எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய்? டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்

டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்ப வழங்கப்பட்டது என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய்? டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்

விஜய்

Updated On: 

07 May 2026 18:29 PM

 IST

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிக தொகுதிகளில் வென்றதன் அடிப்படையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் விஜய்க்கு பெரும்பான்மை இல்லை எனக்கூறி ஆளுநர் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. தற்போது காங்கிரஸ் மட்டும் ஆதரவு அளித்துள்ள நிலையில் மற்ற கட்சிகளிடம் தவெகவினர் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்ப வழங்கப்பட்டது என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும், டிஜிபி மற்றும் தலைமைச் செயலரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மே 4, 2026 அன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டதோடு, கான்வாய் வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு மே 6, 2026 அன்று திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..