திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக கார்த்திகை தீபம் செயலி அறிமுகம்…மலை ஏற திடீர் கட்டுப்பாடு…!

Karthigai Deepam App Launched : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக கார்த்திகை தீபம் செயலி அறிமுகம்...மலை ஏற திடீர் கட்டுப்பாடு...!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் செயலி

Published: 

03 Dec 2025 13:44 PM

 IST

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று டிசம்பர் 3 நடைபெறுகிறது. இதற்காக, இன்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக கோவிலில் பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர்த்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலை ஏற கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு

இந்த நிலையில், திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படும் மலை மீது ஏறுவதற்கு கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், மலை மீது ஏறுவதற்கு 156 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை, பேகோபுரம் பகுதியில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் கமாண்டோ படையினர், வருவாய் துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க: கார்த்திகை தீபத் திருவிழா… தயாராகும் திருவண்ணாமலை… என்னென்ன ஏற்பாடுகள்?

மண் சரிவு உயிரிழப்பு எதிரொலி

இதனால், திருவண்ணாமலையில் மலை மீது ஏறுவதற்காக ஆர்வமுடன் வந்த பக்தர்கள் அந்த பகுதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக மலைப்பகுதிகளில் இருந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனால் கடந்த ஆண்டு கார்த்திகை தீப தினத்தன்று மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதே போல இந்த ஆண்டும் மலை ஏறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் செயலி அறிமுகம்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் செயலி 2025 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம், வாகனங்கள் நிறுத்தும் இடம், மருத்துவ முகாம்கள், அருணாசலேஸ்வரர் கோயில் வரைபடம், பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதி, கழிப்பறைகள், குடிநீர் வசதி, காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.

இரு மொழிகளில் வடிவமைக்கப்பட்ட செயலி

இந்த செயலியானது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கோவிலில் எந்த வழியாக உள்ளே செல்ல வேண்டும், எந்த வழியாக வெளியே செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட மேப் வசதியும் அதில் உள்ளது. இதனை பக்தர்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!!

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!