ரம்புட்டான் பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி.. விதை தொண்டையில் சிக்கியதால் விபரீதம்.. நெல்லையில் சோகம்!
Tirunelveli Boy Dies after Eat rambutan : திருநெல்வேரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழத்தை சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதில் மூச்சுத் திணறி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி, ஜூலை 03 : திருநெல்வேலி மாவட்டத்தில் ரம்புட்டான் பழத்தின் (Rambutan Seed) விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழம் சாப்பிடும்போது, தவறுதலாக சிறுவனின் தொண்டையில் விதை சிக்கியது. இதனை அடுத்து, மூச்சு திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகளுக்கு சாப்பிடும் பொருட்களை கவனமாக கொடுக்க வேண்டும். இல்லையெனில், குழந்தைகள் தொண்டையில் சிக்கி உயிரிழக்க கூடும் நெரிடலாம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. அதாவது, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் பரீத். இவரது மகன் நிஜாம். நிஜாம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால், தனது மகனை தந்தை ஷேக் பரீத் பராமரிப்பில் விட்டு சென்றிருக்கிறார்.
ரம்புட்டான் பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி
இதற்கிடையில், அவ்வப்போதும் மகனை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்து சென்று வருகிறார். இந்த நிலையில், 2025 ஜூலை 2ஆம் தேதியான நேற்று மாலை ஷேக் பரீத் தனது பேரன் ரியாஸை கடைத்தெருவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, பேரன் ரியாஸுக்கு ஷேக் பரீத் ரம்புட்டான் பழத்தை வாங்கிக் கொடுதுதுள்ளார்.
இதன்பிறகு, இருவரும் வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்ற சிறுவன், ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டுள்ளார். அபபோது, சிறுவனின் தொண்டையில் ரம்புட்டான் பழத்தின் விதை சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் ரியாஸ் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார்.




சிறிது நேரம் கழித்து சிறுவன் மயக்கமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த ஷேக் பரீத், உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உயிரிழந்துவிட்டதாக கூறினார். மூச்சுக் குழாயில் ரம்புட்டான் பழத்தின் விதை சிக்கிக் கொண்டதால், மூச்சு விட முடியாமல் திணறி சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ரம்புட்டான் பழம்
ரம்புட்டான் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ரம்புட்டான் பழத்தில் வைட்டமின் சி, பி6, பி3, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. ரம்புட்டான் பழத்தில் அதிகளவ நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு நல்லது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். மேலும், ரம்புட்டான் பழத்தில் வைட்டமின் சி உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
இந்த பழத்தை சாப்பிட்ட குழந்தை தான் உயிரிழந்துள்ளது. இந்த பழத்தில் விதை பெரிதாக இருக்கும். எனவே, குழந்தைகளுக்கு இந்த பழத்தை கொடுக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். ரவுட்டான் பழத்தின் விதைகளை எடுத்த பிறகே, குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இல்லையெனில், ரம்புட்டான் பழத்தின் விதை வழவழப்புத் தன்மையுடன் இருப்பதால், குழந்தைகளின் தொண்டையில் சிக்கக் கூடும். இதனால், விதையை அகற்றிய பிறகே, குழந்தைகளுக்கு ரம்புட்டான் பழத்தை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.