ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..

Subsidy For Electric Scooters: ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு உதவும் வகையில், தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 2000 பேருக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

07 Aug 2025 10:26 AM

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க 20,000 ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஆன்லைன் டெலிவரி என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. காய்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் என எதுவாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் நமக்கு டெலிவரி செய்யப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு மக்கள் இடையே ஆன்லைன் டெலிவரி என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மின்சார ஸ்கூட்டர் வாங்க மானியம்:

ஆன்லைனில் டெலிவரி செய்யும் நபர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்திலேயே டெலிவரி செய்கின்றனர். அந்த வகையில் தற்போது டெலிவரி செய்யும் ஊழியர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க 2000 ரூபாய் மானியம் வழங்க திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது டெலிவரி ஊழியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயலாளர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “ தமிழக சட்டசபையில் கடந்த 2025 மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதார சூழலில் இணையம் சார்ந்த சேவை பணிகள் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க: திமுக என்றாலே ஊழல்தான்! அது கார்ப்ரேட் கம்பேனி.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

இந்த தொழிலாளர்களின் நலனுக்காக இணையும் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2000 பேருக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்க தலா ரூ. 20,000 மானியமாக வழங்க திட்டம் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.

மேலும் படிக்க: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. உச்சநீதிமன்றம் உத்தரவு!

2000 பேருக்கு மானியம் – ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு:

இந்த திட்டம் குறித்து முன்மொழிவை அரசுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ளார். அதில் இணையம் சார்ந்த சேவை பணிகளில் ஈடுபடும் 2000 பேருக்கு 20 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரி இருந்தார். இந்த முன்மொழிவை அரசு கவனமுடன் பரிசீளித்து அதை ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக நான்கு கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிடுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது