தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் உயிரிழப்பு – பரபரப்பு தகவல்

Teacher Protest Tragedy: சென்னையில் போராட்டத்தில் கைதானபோது தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இவர் பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை அரசு உயர் நிலை பள்ளியில் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் உயிரிழப்பு - பரபரப்பு தகவல்

தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் மரணம்

Updated On: 

14 Jan 2026 20:10 PM

 IST

சென்னை, ஜனவரி 14 : சென்னையில் ஜனவரி 14, 2026 அன்று ஆசிரியர்கள் (Teachers) போராட்டத்தில் கைதானபோது தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இவர் பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை அரசு உயர் நிலை பள்ளியில் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh) போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தர பணியிடம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 6, 2026 அன்று முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் வழங்கப்படும் என கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : மயக்க மருந்து கொடுத்து தங்க நகை திருட்டு… சென்னை அரசு மருத்துவமனை செவிலியர் கைது

அமைச்சருடன் பேச்சுவார்த்தை

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பகுதி நேர ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவருடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில், பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

இதற்கு முன்னதாக, நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், வானகரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு, பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிய கண்ணன், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து மற்றும் அடக்குமுறையை எதிர்த்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையும் படிக்க : நாட்டு வெடிகுண்டை கடித்த குட்டி யானை…வாய் சிதறி பலியான சோகம்…விவசாயியை கைது செய்த வனத்துறை!

அவரை மீட்டு உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 14, 2026 இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியர் கண்ணனின் மரணம், பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பள உயர்வு அறிவிப்பு வெளியான அதே நாளில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்