டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற 5 மணி நேர விசாரணை நிறைவு!

ED Investigates MD Visakan for 5 Hours | சென்னை அமலாக்கத்துறை தலைமை அலுவகத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்று உள்ளதாக அமலக்கத்துறை மார்ச் 2025 என்று பரபரப்பு தகவலை வெளியிட்டது. இந்த நிலையில், இன்று (மே 16, 2025) அமலாக்கத்துறை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற 5 மணி நேர விசாரணை நிறைவு!

கோப்பு புகைப்படம்

Published: 

16 May 2025 22:48 PM

 IST

சென்னை, மே 16 : சென்னை, நுங்கம்பாக்கத்தில் டாஸ்மாக் (TASMAC – Tamil Nadu State Marketing Corporation) மேலாண் இயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை (ED – Enforcement Directorate) அதிகாரிகள் 5 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. டாஸ்மாக்கில் சுமார் 1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்று இருப்பதாக கடந்த சில நாட்களுக்குன் முன்பு அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்த நிலையில், இன்று (மே 16, 2025) காலை முதல் அமலாக்கத்துறை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், விசாகனிடம் நடைபெற்ற விசாரணை குறித்து விரிவாக பார்க்கலாம்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை

2025, மார்ச் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அமலாக்கத்துறை, ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியது. டாஸ்மாக் அலுவலம் மீது அமலாக்கத்துறை முன்வைத்த இந்த குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சட்டுக்களை முன்வைத்து வந்தன.

விசாகனிடம் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணை

இந்த நிலையில், இன்று (மே 16, 2025) காலை முதலே டாஸ்மாக் இயக்குனர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்தது. அப்போது அவரது வீட்டில் கிழிந்த நிலையில் இருந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் நகல்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக விசாகனை சென்னை நுங்கமபாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காலை முதல் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், மாலையுடன் அலுவலகத்தில் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

வீட்டிற்கு சென்றும் விசாரணை தொடருமா?

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாகனை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய நிலையில், அவரை காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக அவரது வீட்டிலும் விசாரணை தொடரும் என தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்