தவெக 2ஆம் கட்ட கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசு அளிக்கு விஜய்!

TVK Education Award Function : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது விழா 2025 ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கல்வி விருது விழாவில் 75 தொகுதிகளைச் சேர்ந்த 10,12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

தவெக 2ஆம் கட்ட கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசு அளிக்கு விஜய்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

Updated On: 

04 Jun 2025 07:00 AM

சென்னை,  ஜூன் 4 : தமிழக வெற்றிக் கழகம் (tamizhaga vettri kazhagam) சார்பில் 2ஆம் கட்ட கல்வி விருது விழா 2025 ஜூன் 4ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் கல்வி விருது விழாவில் (TVK Education Award Function) 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கல்வி விருது விழா வழங்கப்பபடுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த கல்வி விருது விழாவில், மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து விஜய் கவுரவித்து வருகிறார். அந்த வகையில், மூன்றாவது ஆண்டும் கல்வி விருது விழா தமிழக வெற்றிக் கழகம் நடத்தி வருகிறது.

தவெக 2ஆம் கட்ட கல்வி விருது விழா

முதற்கட்டமாக 2025 மே 30ஆம் தேதி விஜய் தலைமையில் கல்வி விருது விழா நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசளித்து விஜய் கவுரவித்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் கட்டமாக கல்வி விருது விழா 2025 ஜூன் 4ஆம் தேதியான இன்ற நடைபெற உள்ளது. விஜய் தலைமையில் நடக்கும் கல்வி விருது விழாவில், 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த கல்வி விருது விழா சென்னை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

13 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு


அதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருச்சி, தருமபுரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 75 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். அதோடு, புதுச்சேரியில் 9 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரிசு, ஊக்கத்தொகை, சான்றிழ்களை வழங்க உள்ளார்.

முழு நேர அரசியலில் விஜய்

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்துள்ளதாக தெரிகிறது. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. அதாவது, அடுத்த சில மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்களே இருப்பதால், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த விஜய் தீவிரமாக இறங்கி உள்ளார். அதோடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.