தமிழகத்தில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான் கணிப்பது என்ன?
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், டிசம்பர் 16, 2025: தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்துள்ள சூழலில், வரக்கூடிய நாட்களில் இந்த பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 16, 2025 தேதியான இன்று, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை வரக்கூடிய டிசம்பர் 23ஆம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகரிக்கும் பனிப்பொழிவு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 32.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 29.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் குளிர் அதிகரிக்கும் – பிரதீப் ஜான்:
Ooty continues to be coldest hill station in Southern Peninsula, next 2 days the clouds / rains will increase the night temperature
——————————-
Next 2 days (16 and 17th) there will be increase in Minimum temperature as there will be in cloud cover / rains in… pic.twitter.com/aujErU0wdv— Tamil Nadu Weatherman (@praddy06) December 15, 2025
வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறையக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில், தமிழகத்தில் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும் என்றும், மேகமூட்டம் காரணமாக இரவு நேரங்களில் வெப்பநிலை சற்றே அதிகரித்து காணப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5000 அபராதம்.. 15 குழுக்களை அமைத்த சென்னை மாநகராட்சி..
அதே நேரத்தில், வரக்கூடிய டிசம்பர் 19 முதல் 23ஆம் தேதி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும், உள் தமிழகத்திலும் அதிகப்படியான குளிர் நிலவும் என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.
டிசம்பர் 31 வரை 10 – 20 மிமீ மழைக்கு வாய்ப்பு:
மேலும், டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்தார். வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும் என்றும், அதிகபட்சமாக டிசம்பர் 31ஆம் தேதி வரை 10 முதல் 20 மில்லி மீட்டர் அளவு மழை மட்டுமே கிடைக்கக்கூடும் என்றும், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.