அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெளுக்கப்போகும் மழை.. பிரதீப் ஜான்

Weatherman Pradeep John: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தீவிரமடைந்து, வரக்கூடிய நாட்களில் கன்னியாகுமரியை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும், இது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெளுக்கப்போகும் மழை.. பிரதீப் ஜான்

கோப்பு புகைப்படம்

Published: 

17 Oct 2025 06:40 AM

 IST

வானிலை நிலவரம், அக்டோபர் 17, 2025: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வரக்கூடிய நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும், இதன் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் காலை வரை நல்ல மழை இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று (நேற்று) தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள காரணத்தால் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

இதன் காரணமாக அக்டோபர் 17, 2025 அன்று விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. தூத்துக்குடியில் பதிவான 15 செ.மீ மழை..

கடலோர மாவட்டங்களில் கொட்டும் மழை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மாலை முதல் காலை வரை நகரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிறது.

மேலும் படிக்க: கடலூரில் இடி தாக்கி 4 பெண்கள் பலி… விவசாய நிலத்தில் வேலை பார்த்தபோது நேர்ந்த சோகம்

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – பிரதீப் ஜான்:


இந்த சூழலில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி தீவிரமடைந்து, வரக்கூடிய நாட்களில் கன்னியாகுமரியை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும், இது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி பகுதிகளில் கூட நல்ல மழை இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளில் இரவு தொடங்கி காலை நேரம் வரை நல்ல மழை இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.