Tamilnadu Weather Update: தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Tamil Nadu Heavy Rain Warning: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 26ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்
சென்னை, ஜூலை 26: தமிழ்நாட்டில் 2025 ஜூலை 26ம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் (Tamilnadu Weather Update) சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) வெளியிட்ட அறிக்கையில், குஜராத்திற்கு வடக்கே அமைந்துள்ள கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அதாவது அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், இன்று அதாவது 2025 ஜூலை 26ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அமைந்துள்ள மலை பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: மக்களே உஷார்.. 3 நாட்களுக்கு சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து.. எந்தெந்த ஏரியா?
இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
தினசரி வானிலை அறிக்கை pic.twitter.com/0NpphLUONu— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 26, 2025
2025 ஜூலை 26ம் தேதியான நாளை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். அதன்படி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், இந்த பகுதிகளில் தரைக்காற்று மனிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனை தொடர்ந்து, 2025 ஜூலை 28 முதல் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ALSO READ: கோவை மக்கள் நிம்மதி.. 5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடல்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
சென்னையில் இன்று வானிலை எப்படி..?
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று அதாவது 2025 ஜூலை 26ம் தேதி வானமானது மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல், ஒரு சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். 2025 ஜூலை 26ம் தேதியான நாளை, சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.