அடுத்தடுத்த சுழற்சிகள்.. புயல் உருவாகுமா? வெதர்மேன் சொல்லும் தகவல்..
Tamil Nadu Weather Update: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதில், கடலூர்–டெல்டா முதல் தென் தமிழகம்ம்வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டிவருகிறது, மேலும் கனமழை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நவம்பர் 24, 2025 இன்று காலை கனமழை இருந்தாலும், படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரம், நவம்பர் 24, 2025: வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து சற்று வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்) 23, நாலுமுக்கு (திருநெல்வேலி மாவட்டம்) 22, சேத்தியாதோப் (கடலூர் மாவட்டம்), காக்காச்சி (திருநெல்வேலி மாவட்டம்) தலா 21 பேர், மாஞ்சோலை (திருநெல்வேலி மாவட்டம்) 19, பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாவட்டம் கடலூர், புவனகிரி மாவட்டம் கடலூர், திருக்குவளை மாவட்டம் நாகப்பட்டினம், மதுக்கூர் மாவட்டம்) தலா 14, வெட்டிகாடு (தஞ்சாவூர் மாவட்டம், தலைஞாயிறு மாவட்டம் நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்) தலா 13, சிதம்பரம் AWS (மாவட்டம் கடலூர், ஒர்த்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம், வடகுத்து மாவட்டம்) கடலூர், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்) தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!
அடுத்தடுத்து சுழற்சிகள் – புயலாக வலுப்பெறக்கூடும்:
இது ஒரு பக்கம் இருக்க, அந்தமான் கடல் பகுதிகளை ஒட்டி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு–வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலக் கீழ்மை சுழற்சி நிலவுகிறது. அதேபோல் குமரி கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழ்மை சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சுழற்சிகள் எந்த பாதையில் பயணம் மேற்கொள்கின்றன என்பதையே பொறுத்து மாவட்ட வாரியாக மழை அளவை கணிக்க முடியும்.
மேலும் படிக்க: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது!
டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் தொடரும் மழை – பிரதீப் ஜான்:
What a Day for Tamil Nadu – Today one final spell from this system.
——————————
From Cuddalore, Delta to South Tamil Nadu, the entire stretch has been smashed with rains. Manjolai stations continue their dominance with yet another double century the 3rd in the… pic.twitter.com/n9YqzPoGi2— Tamil Nadu Weatherman (@praddy06) November 24, 2025
இந்த சூழலில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதில், கடலூர்–டெல்டா முதல் தென் தமிழகம்ம்வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டிவருகிறது, மேலும் கனமழை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நவம்பர் 24, 2025 இன்று காலை கனமழை இருந்தாலும், படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும், குமரி கடல் பகுதிகளில் உருவாகியுள்ள சுழற்சி புயலாக வலுப்பெறக்கூடும். நவம்பர் 26 ஆம் தேதி இந்த புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.