தமிழக வானிலை நிலவரம்: அடுத்த இரு தினங்களில் 3°C வரை வெப்பம் உயரும்

Tamil Nadu Weather: மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 23-03-2026 மற்றும் 24-03-2026 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மேகமூட்டம் நீடிக்கும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸாக உயரக்கூடும்.

தமிழக வானிலை நிலவரம்: அடுத்த இரு தினங்களில் 3°C வரை வெப்பம் உயரும்

மாதிரி புகைப்படம்

Updated On: 

23 Mar 2026 14:46 PM

 IST

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 1. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை குறைந்தும், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 37.5° செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை சமவெளிப்பகுதிகளில் திருத்தணியில் 22.5° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 9.1° செல்சியஸ் ஆக இருந்தது.

அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு

மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 23-03-2026 மற்றும் 24-03-2026 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25-03-2026 மற்றும் 26-03-2026 தேதிகளில் முழு பகுதிகளிலும் வறண்ட வானிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. 27-03-2026 அன்று மீண்டும் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் லேசான மழை ஏற்படலாம். 28-03-2026 மற்றும் 29-03-2026 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட நிலை தொடரும்.

வெப்பநிலை மாற்றம் மற்றும் முன்னறிவிப்பு

23-03-2026 முதல் 25-03-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு. 26-03-2026 மற்றும் 27-03-2026 தேதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். இயல்பு நிலையிலிருந்து பார்க்கும்போது 23-03-2026 முதல் 25-03-2026 வரை வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். ஆனால் 26 மற்றும் 27 தேதிகளில் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

Also Read: இன்று உலக வானிலை தினம்: வானிலை முன்னறிவிப்பின் அவசியம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு

இன்று (23-03-2026) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸையும் ஒட்டியிருக்கும். நாளை (24-03-2026) இதேபோன்ற மேகமூட்டம் நீடிக்கும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸாக உயரக்கூடும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸாகவே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 23-03-2026 முதல் 27-03-2026 வரை எந்தவிதமான எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை. எனவே மீனவர்கள் வழக்கமான முறையில் கடலுக்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது – ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து..
திமுக கூட்டணியில் 5 இடங்களை ஏற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்? இன்று இறுதி முடிவு..
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள்.. பாமகவிற்கு 18 இடங்கள்..
V.Jayaraman Tamil Nadu Election: 5 முறை தொடர் வெற்றியாளர் வி.ஜெயராமன் … 6-ஆவது முறை வெற்றிக்கு வித்திடுமா உடுமலைப்பேட்டை தொகுதி!
ரூ.3 கோடிக்கு லேண்ட் ரோவர்… கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதியில்லையா? ஓபனாக பேசிய பிரேமலதா!
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..