அடுத்த ஒரு வாரம்.. வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூலை 17ஆம் தேதியான நாளை சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, ஜூலை 16 : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை (Tamil Nadu Weather Update) பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu IMD) தெரிவித்துள்ளது. இதில், நீலகரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்துவிட்டது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக்ததில் 2025 ஜூலை 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெளுக்கப்போகும் கனமழை
அதன்படி, 2025 ஜூலை 16ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 17ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : சென்னையில் இனி வரும் நாட்களில் மழை இருக்கும்.. பிரதீப் ஜான் சொல்வது என்ன?




2025 ஜூலை 18ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 ஜூலை 19ஆம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி?
2025 ஜூலை 20ஆம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : தமிழகம் முழுவதும் மாறும் வானிலை: மழையும், வெப்பமும் இருக்கும்…
2025 ஜூலை 21,22ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 16ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், 2025 ஜூலை 17ஆம் தேதியான நாளை நகரில் ஒருசில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.