கேப் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 அக்டோபர் 5ஆம் தேதியான இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேப் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Alert (13)

Published: 

05 Oct 2025 06:22 AM

 IST

சென்னை, அக்டோபர் 05 : தமிழகத்தில் 2025 அக்டோபர் 5ஆம் தேதியான இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக்ததில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், அடுத்த சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய சக்தி புயல் தற்போது, வடமேற்கு மற்றும அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது துவாரகாவில் இருந்து மேற்கே சுமார் 470 கி.மீ தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவி, பிறகு கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும். தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 அக்டோபர் 5ஆம் தேத முதல் 10ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

 இன்று கனமழை வெளுக்கும்


குறிப்பாக, 2025 அக்டோபர் 5ஆம் தேதியான இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னைனை பொறுத்தவரை 2025 அக்டோபர் 5ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.