அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. சென்னையில் எப்படி? வானிலை மையம் முக்கிய அப்டேட்
Tamil Nadu Weather Update : வட தமிழகம், தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆறு தினங்களுக்கு தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 21 : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கம் கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக இருந்தது. அதே சமயம், தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறீப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இரவு மற்றும் மாலை நேரங்களில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. காலையிலும் சில நாட்களில் மழை பெய்து வருகிறது.
இதனால், சென்னை நகரம் முழுவதுமே குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 21,22ஆம் தேதிகளில் வட தமிழகத்திலும், தென் தமிழகத்திலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Also Read : குளு குளு சென்னை.. தொடரும் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
சென்னையில் மழை நிலவரம் என்ன?
FISHERMEN WARNINGhttps://t.co/cAHkWzSIfb pic.twitter.com/l5vVUZPJcS
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 20, 2025
சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கிடையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட அதிகம் பெய்யும் எனவும் கணித்துள்ளனர்.
Also Read : மக்களே ரெடியா? சென்னையில் கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்
மேலும், டிசம்பர் மாதத்தில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்து, அடுத்தடுத்து இரண்டு புயல்கள் உருவாகலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். புயல் சின்னங்கள் டெல்டா வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால் வட மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைப்பொழிவு இருக்கும். ஜனவரி பிப்ரவரியில் இயல்புக்கு அதிக மழை பதிவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.