AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேமுதிகவுக்கு சீட் இல்லை.. ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

AIADMK Rajya Sabha candidates : மாநிலங்களவை தேர்தல் 2025 ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிமுக சார்பில் தனபால் மற்றும் இன்பதுரை போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படவில்லை

தேமுதிகவுக்கு சீட் இல்லை.. ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Jun 2025 12:46 PM IST

சென்னை,  ஜூன் 01 : அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் (rajya sabha election 2025) போட்டியிடும் வேட்பாளர்கள்  (AIADMK Rajya sabha candidates) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. 2026ஆம் ஆண்டு தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் 2025 ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது. அதாவது திமுகவில் அப்துல்லா, சண்முகம், பி.வில்சன், மதிமுக பொதுச் செயலளார் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவில் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

இந்த நிலையில், இந்த ஆறு இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, 2025 ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2025 ஜூன் 9ஆம் தேதி தொடங்குகிறது.

வேட்பு மனுவை திரும்ப பெற 2025 ஜூன் 12ஆம் தேதி கடைசி நாளாகு. இந்த 6 இடங்களில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுகவில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். திமுக ஏற்கனவே தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், தற்போது அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த 2 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், தேமுகதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அதன்படி, அதிமுகவில் இன்பதுரை மற்றும் தனபால் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து  ஆலோசனை நடத்திய நிலையில், தனபால், இன்பதுரை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்பதுரை, தனபால் வேட்பாளர்கள்

யார் இந்த தனபால்?

1977ஆம் ஆண்டு சடந்த சட்டப்பேரவை தேர்தலில் சங்ககிரி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் தனபால். அதைத் தொடர்ந்து, 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களிலும் சங்ககிரி தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2011ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை துணை தலைவராக பதவி வகித்த தனபால், 2012ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் 19வது தலைவராக அமர்ந்தார். அதைத் தொடர்ந்து, 2016, 2021ஆம் தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

யார் இந்த இன்பதுரை?

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இன்பதுரை. வழக்கறிஞரான இவர், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிமுகவில் முக்கிய பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us