பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் முழு ஆதரவு… நயினார் நாகேந்திரன்!

Tamil Nadu People Support Of The BJP Alliance: தமிழக மக்கள் பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதாகவும், இதன் மூலம் அந்தக் கூட்டணி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் முழு ஆதரவு... நயினார் நாகேந்திரன்!

பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு

Published: 

17 Dec 2025 15:44 PM

 IST

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கெடுப்பதாக கூறியும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளன. 10 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை சாலையில் பயமின்றி நடமாட முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்துள்ளனர். கரூரில் தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. இவையெல்லாம் தவிர்த்து விட்டு இந்த ஆட்சியை தமிழக மக்கள் எப்படி அங்கீகாரம் செய்வார்கள்.

ஜனவரி 9- இல் பாஜக யாத்திரை நிறைவு

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வர உள்ளதாக இருக்கிறது. பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பிய பின்னர் அது குறித்து பேசி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் யாத்திரை ஜனவரி மாதம் 9- ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

மேலும் படிக்க: இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு இன்னல்கள்

இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைப்பதாக முடிவு எடுத்துள்ளோம். இவர்களிடம் நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற்றாலும் அதனை சந்திப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. தமிழக மக்கள் எந்த கட்சியின் பக்கம் உள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டு கால தி மு க ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.

பாஜக கூட்டணி வலுவாக உள்ளது

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு என அனைத்தும் திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அதில், எந்த சந்தேகமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வலுவாக இல்லை.

தேஜகூட்டணி உறுதியாக ஆட்சி அமைக்கும்

ஏனென்றால், தமிழக மக்கள் அந்த கூட்டணிக்கு ஆதரவாக இல்லை. இதனால், அந்த கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். சட்டமன்றத் தேர்தலுக்காக பா ஜ க முழு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உறுதியாக ஆட்சி அமைக்கும். தி மு கவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழக இளைஞர்களை தவெக தவறாக வழி நடத்துகிறது…பி.டி.செல்வகுமார் கடும் தாக்கு!

ஜனவரி முதல் மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்.. அதிரடியாக உயரப்போகும் டிவி விலை..
அஷ்வின் கணிப்பில் 2026 ஐபிஎல் ஏலத்தில் கோடீஸ்வரர்களாக மாறக்கூடிய அறியப்படாத வீரர்கள்
நீங்க ரெட் கலர் லிப்ஸ்டிக் யூஸ் பண்றீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
சென்னை – நரசாபூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை.. நேரம், கட்டணம், வழித்தட விவரம்