Tamil Nadu News Live: அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர், படத்தை பயன்படுத்த அனுமதி

Tamil Nadu Breaking News Today 6 August 2025, Live Updates: தமிழக அரசின் திட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu News Live: அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர், படத்தை பயன்படுத்த அனுமதி

தமிழ்நாடு செய்திகள் நேரலை

Updated On: 

06 Aug 2025 14:46 PM

LIVE NEWS & UPDATES

  • 06 Aug 2025 03:00 PM (IST)

    கவின் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி

    திருநெல்வேலி கவின் கொலை வழக்கில் விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை நடந்த இடத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 06 Aug 2025 02:45 PM (IST)

    புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை.. 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    கோவை கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர், உயிரை மாய்த்து கொண்ட விவகாரத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் படிக்க

  • 06 Aug 2025 02:30 PM (IST)

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்!

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%ஆக உயர்ந்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது, திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் பொருளாதாரம் அதிகரிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • 06 Aug 2025 02:15 PM (IST)

    அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த அனுமதி!

    தமிழக அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 06 Aug 2025 02:00 PM (IST)

    மயிலாடுதுறை எம்.பி சுதா நகை பறிப்பு.. திருடனை பிடித்த போலீசார்!

    டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி சுதாவின் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது தங்க செயினை பறித்த விவகாரத்தில் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சுதா இலேசான காயமடைந்தார். எம்.பி.யிடம் நகை பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் படிக்க

  • 06 Aug 2025 01:45 PM (IST)

    காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நபர் தற்கொலை

    கோவை மாவட்டத்தில் உள்ள கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற ஒருவர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளிக்க சென்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  • 06 Aug 2025 01:30 PM (IST)

    நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்த ஆட்டோ.. 4 வயது சிறுவன் பலி

    கடலூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்து ஆட்டோ விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த தந்தை கண்முன்னே 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சிறுவனை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது விபத்து நிகழ்ந்துள்ளது.

  • 06 Aug 2025 01:15 PM (IST)

    பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பு.. அமலாக்கத்துறைக்கு அபராதம்

    தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்  மற்றும் தொழிலதிபர் ரவீந்தரன் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

  • 06 Aug 2025 01:00 PM (IST)

    திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ படுகொலை.. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

    திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரிக்க செல்லும் போலீசாருக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பதை எப்படி எடுத்துக் கொள்வது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

  • 06 Aug 2025 12:45 PM (IST)

    திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான்!

    புதுக்கோட்டை மாவட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

  • 06 Aug 2025 12:30 PM (IST)

    மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்!

    உணவு டெலிவரி செய்யும் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • 06 Aug 2025 12:15 PM (IST)

    எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலை.. அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆறுதல்

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினரை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார். இவரது தோட்டத்தில் நடந்த பிரச்னையை தீர்க்கச் சென்ற சண்முகவேல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 06 Aug 2025 12:00 PM (IST)

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணி தலைவர்கள்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் சண்முகம் ஆகியோர் இன்று சந்தித்தனர்.  மேலும் படிக்க

  • 06 Aug 2025 11:50 AM (IST)

    கடன் தொல்லையால் மகள்களை கொன்று தந்தை தற்கொலை

    கடன் தொல்லையால் தனது மூன்று மகள்களை கழுத்து அறுத்து தந்தை கொலை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, அவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

  • 06 Aug 2025 11:39 AM (IST)

    மின் கட்டணம் ரூ.91,993.. ஷாக்கான குடும்பத்தினர்!

    சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில், ஜூலை மாத கணக்கீட்டில் மின் கட்டணம் ரூ.91,993 என வந்ததால் அக்குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மேலும் படிக்க

  • 06 Aug 2025 11:29 AM (IST)

    12 ஆம் வகுப்பு மாணவனை வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்!

    திருநெல்வேலியில் தனது அக்காவுடன் பழகி வந்த 12 ஆம் வகுப்பு மாணவனை 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. பலமுறை கூறியும் 12ம் வகுப்பு மாணவர் கேட்கவில்லை என தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 சிறுவர்களை சேரன்மகாதேவி போலீசார் கைது செய்தனர். மேலும் படிக்க

  • 06 Aug 2025 11:19 AM (IST)

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

    கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் மீனவர்கள் 10 பேர், தொண்டியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 06 Aug 2025 11:09 AM (IST)

    Tiruppur Crime : சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை.. முதலமைச்சர் இரங்கல்

    திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சண்முகவேல் இறப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ரூபாய் ஒரு கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க

    முதலமைச்சர் வெளியிட்ட பதிவு

  • 06 Aug 2025 10:59 AM (IST)

    குழந்தையை தூக்கி போட்டு விளையாடியபோது நிகழ்ந்த விபரீதம்!

    சென்னை சூளைமேட்டில் தனது 2 வயது ஆண் குழந்தையை சந்தோஷ் தூக்கி போட்டு விளையாடியபோது சீலிங் பேன் இடித்ததால் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

  • 06 Aug 2025 10:47 AM (IST)

    Tamil Nadu Rains : எந்தெந்த மாவட்டங்களில் மழை?

    தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், ஆகஸ்ட்  11ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது

    Read More

  • 06 Aug 2025 10:46 AM (IST)

    Tamil Nadu Weather : தமிழ்நாடு வானிலை நிலவரம்.. மழை அப்டேட்

    வானிலை நிலவத்தை பொறுத்தவரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News in Tamil Today 6 August 2025, Live Updates: தமிழ்நாட்டில் வானிலை (Tamil Nadu Weather Today) மாறி வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வானிலை மாற்றத்தை பொருத்தவரை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர், தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரும் கைதாகி உள்ளனர். இது தொடர்பான அப்டேட்களை பார்க்கலாம். இது போக திருப்பூரில் போலீசார் வெட்டிக்கொலை (crime) செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்ற வருகிறது. மேற்கொண்டு தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்

மேலும் தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்