AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

487.66 கோடி ரூபாய் பிளான்.. உலகத் தரத்தில் குழந்தைகள் மருத்துவமனை.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

Children Multi Speciality Hospital: சென்னை கிண்டியில் இருக்கும் கிங் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிவென்ட்யு மெடிசன் அண்ட் ரிசர்ச் வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 20 துறைகள் கொண்ட குழந்தைகள் பல்நொக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

487.66 கோடி ரூபாய் பிளான்..  உலகத் தரத்தில் குழந்தைகள் மருத்துவமனை.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Jun 2025 08:53 AM IST

சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிவென்ட்யு மெடிசன் அண்ட் ரிசர்ச் வளாகத்தில் 487.66 கோடி மதிப்பீட்டில் ஏழு தளங்களுடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதற்கு அனுமதி வழங்கிய பின் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தற்போது இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

20 துறைகள் அடங்கிய குழந்தைகள் பல்நோக்கு மருத்துவமனை:


கிண்டியில் அமைய இருக்கும் குழந்தைகள் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவம், அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை, எலும்பியல், நரம்பியல், சிறுநீரகவியல், நுரையீரல், இரைப்பைக்குடல், இருதயவியல், ஹீமோடோ – ஆன்காலஜி, நரம்பியல் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்ற பிரிவு ஆகிய 14 தனித்துவமான துறைகள் உட்பட 20 துறைகள் கொண்டு இருக்கும். இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள் 100 தீவிர சிகிச்சை பிரிவுகள், சிறப்பு வார்டுகள் மற்றும் அறைகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் போன்ற மருத்துவ ஆய்வகங்களும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 6.5 ஏக்கர் பரப்பளவில் 487.66 கோடி ரூபாயில் ஏழு மாடி கட்டிடமாக கட்டப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான விடுதிகள் உட்பட 3.15 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கான இடம் தேர்வு முடிவடைந்து விட்டதாகவும் மருத்துவமனையை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் பல்நோக்கு மருத்துவமனைக்கான ஒப்பந்தம் ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டி கிங் மருத்துவமனையில் ஏற்கனவே கலைஞர் பல்நோகு மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில் கூடுதல் சிறப்பாக இந்த குழந்தைகள் மருத்துவமனையும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us