தரமற்ற கேன் தண்ணீர் – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?
Poor Quality Drinking Water Cans : தமிழ்நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கேன் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடைகளில் விற்கப்படும் கேன் தண்ணீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 27 : தரமற்ற கேன் தண்ணீர் விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தண்ணீர் கேன்களை 30 முறைக்கு மேல் மறு சுழற்சி செய்யக்கூடாது, கேன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் தரமில்லாத கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.5000 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் கோட வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கிக் குடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அப்படி விற்கப்படும் ஒரு தண்ணீர் கேன் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ரூ. 15 முதல் ரூ. 30 வரை விற்பனையாகிறது.
இதையும் படிக்க : மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கேன் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான வாட்டர் கேன்கள் விற்பனையாகின்றன. இந்த நிலையில் கடைகளில் விற்கப்படும் கேன் தண்ணீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் கேன் குடிநீரின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் செயல்படும் குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தரமில்லாத கேன் குடிநீர் விப்னை செய்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள உத்தரவின் படி கேன் வாட்டரில் நிறுவனத்தின் பெயர் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறுவது அவசியம். என அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவில் அமலுக்கு வரும் மாற்றம்?.. வெளியான முக்கிய தகவல்!
மேலும் கேன் தண்ணீரை சூரிய ஒளிபடும்படி சேமித்து வைக்கக் கூடாது, கேன்களை 30 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மி.கி என்ற அளவிலும் மெக்னீசியம் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் இருப்பதையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.