மழை ஒரு பக்கம்.. பொளக்கும் வெயில் ஒரு பக்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Tamil Nadu Weather Alert: தமிழ்நாட்டில் அனேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வந்தாலும், வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. பாளையங்கோட்டையில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மழை ஒரு பக்கம்.. பொளக்கும் வெயில் ஒரு பக்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Rain 9 Aug

Published: 

09 Aug 2025 06:30 AM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 9, 2025: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, நீலகிரி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 9 2025 தேதியான இன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடில் ஒன்பது சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது.

14 ஆம் தேதி வரை தொடரும் மிதமான மழை:

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10, 2025, தேதியான நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது வருகின்ற ஆகஸ்ட் 14 2025 வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கோவை நீலகிரி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து. வந்த நிலையில் தற்போது மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும் படிக்க: இனி ஈஸியா போகலாம்.. மரக்காணம் – புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இனி கன்னியாகுமரியில் படகு சவாரிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாம் – எப்படி செய்வது?

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சியில் 36.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் பாதிக்கப்பட்டாக மீனம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.