நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு? நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
CPI Veteran nallakannu Hospitalized : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். உடல்நலக் குறைவால் 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதி நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் நல்லகண்ணு
சென்னை, ஆகஸ்ட் 29 : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை, (Nallakannu Hospitalized) முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) சந்தித்து நலம் விசாரித்தார். உடல்நலக் குறைவால் 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதி நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நல்லகண்ணுவை சந்தித்துள்ளார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான நல்லகண்ணு, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி நல்லகண்ணு வீட்டில் தலைசுற்றல் ஏற்பட்டு விழுந்துள்ளார். இதனை அடுத்து, அவர் நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், உடலில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளுக்காக 2025 ஆகஸ்ட் 24ஆம் தே ராஜீவ் காந்தி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். இதற்கிடையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நல்லகண்ணுவை 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Also Read : ’திருப்பூர் ஜவுளித்துறை பாதிப்பு.. நடவடிக்கை தேவை’ மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மேலும், மருத்துவர்களின் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம், நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரைப்படி, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார். இந்த நிலையில், இதனிடையே, நல்லகண்ணு விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர் கூறி வருகின்றனர்.
நல்லகண்ணுவை நேரில் சந்தித்த முதல்வர்
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி (இன்று) முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Also Read : ‘குழந்தைகளை பார்த்ததும் எனர்ஜி வந்துருச்சு’ காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
முன்னதாக, நல்லகண்ணு உடல்நிலை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ”உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் – மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.