தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. எந்தெந்த இடங்கள்? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu New Goverment Colleges : தமிழகத்தில் மேலும் நான்கு புதிய அரசு கலை கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில், புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. எந்தெந்த இடங்கள்? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

30 May 2025 09:40 AM

 IST

சென்னை, மே 30 : தமிழகத்தில் மேலும் நான்கு புதிய அரசு கலை கல்லூரிகள் அமைக்கப்படும் (Tamil nadu New colleges) என்று முதல்வர் ஸ்டாலின்  (Tamil Nadu CM MK stalin) அறிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில், புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய பகுதிகளில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசு  பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு ப்லவேறு திட்டங்களை தொடங்கி வருகிறது. குறிப்பாக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு  பொருளாதார தடையின்றி கல்வி தொடரும் வகையில் உதவித் தொகைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.   மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகவும்,  பல்வேறு மொழிகளை கற்பிக்கும் வகையில், சிறப்பு வகுப்புகளையும் தமிழக அரசு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்

மேலும், மாணவி, மாணவர்களுக்கு   மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது.  இப்படி படிக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு  பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அதன்படி, தமிழகத்தில் மேலும் நான்கு புதிய கலை கல்லூரிகள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

எங்கெங்கு தெரியுமா?

இதற்கிடையில், கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் கல்வி கற்பதற்கு புதிய கல்லூரிகள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் இப்பகுதியிலுள்ள 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள் என  அறிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னதாக, 2025 மே 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் 11 புதிய கல்லூரிகளை திறந்து வைத்தார். அதன்படி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டது.

 

Follow Us
Related Stories
யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!
சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!
சென்னை டூ கேரளம் பருந்து போல பறக்கலாம்.. வருகிறது புல்லட் ரயில் சேவை… திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை நிலவரம் இதோ..
Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?
பொன்ராஜ் மீது விஜய் நேரில் புகார் – மனுவில் குறிப்பிட்டிருப்பது என்ன?
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..