டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்.. அதிர்ச்சி சம்பவம்!

Stray Dog Attacked 8 Years Old Small Boy | சென்னை அடுத்த போரூர் பகுதியில் டியூஷன் சென்ற 8 வயது சிறுவனை தெரு நாய் கடித்து குதறியுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் பூவிருந்தவல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்.. அதிர்ச்சி சம்பவம்!

பாதிக்கப்பட்ட சிறுவன்

Updated On: 

07 Dec 2025 00:01 AM

 IST

சென்னை, டிசம்பர் 06 : சென்னை (Chennai) உள்ளிட்ட பெரிய நகரங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிறுவனை நாய் கடித்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டியூஷன் சென்ற 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

சென்னையை அடுத்த போரூரில் 8 வயது சிறுவன் ஒருவர் டியூஷனுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவனை தெரு நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. தெரு நாய் கடித்ததன் காரணமாக சிறுவனின் முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனை நாய் கடித்து குதறிய நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த துயரம்.. பணத்தை இழந்த இளம்பெண் விபரீதம்

கோலம் போட்டுக்கொண்டு இருந்த பெண்ணையும் கடித்து குதறிய நாய்

இதேபோல பூவிருந்தவல்லி அருகே தனது வீட்டின் வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்த சரளாதேவி என்ற பெண்ணையும் தெரு நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. தெரு நாய் கடித்ததில் அந்த பெண் உடல் முழுவதும் காயமடைந்துள்ளார். சிறுவனை போலவே பெண்ணையும் தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்கள்.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு

தெரு நாய்கள் தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வருவதாகவும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தெரு நாய்களை முகாம்களின் அடைக்க கூடாது என தெரு நாய் ஆர்வலர்கள் குரல் எழுப்பும் நிலையில், தெரு நாய்கள் தொடர்பாக சிக்கல்கள் தீராத பிரச்னையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
தெருவில் விடப்பட்ட பிறந்த குழந்தை.... இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
மூளை கீழே விழும் விநோத நோய் - 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்
சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..