அனுமன் ஜெயந்தி விழா…நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை மாலை-தங்க கவச அலங்காரம்!

Special Worship On Hanuman Jayanti: அனுமன் ஜெயந்தியையொட்டி, தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 1 லட்சத்து 8 வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது.

அனுமன் ஜெயந்தி விழா...நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை மாலை-தங்க கவச அலங்காரம்!

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

Published: 

19 Dec 2025 13:25 PM

 IST

அனுமன் ஜெயந்தியையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் காலை முதல் மாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன்படி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு காலை பால், பன்னீர், தயிர், நெய், பஞ்சாமிர்தம் என்பன உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1 லட்சத்து 8 வடைகளால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை 1.08 லட்சம் வடைகளால் செய்யப்பட்ட மாலையில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.

1008 லிட்டர் பால் அபிஷேகம்

இதைத் தொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சுமார் 1008 லிட்டர் பால் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர், மதியம் ஒரு மணிக்கு தங்கக் கவசத்தால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: அனுமன் ஜெயந்தி 2025: வழிபடுவதற்கு சிறந்த நேரம் எது? எப்படி வழிபடுவது?

கோயில் வளாகத்தில் 2.5 டன் மலர்களால் அலங்காரம்

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் சுமார் 2.5 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழியான தனித் தனியாக வழிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 500- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில்

இதே போல, தமிழகத்தின் பிற பகுதிகளான சென்னை நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில், செங்கல்பட்டு கோதண்ட ராமர் கோவில் வீர ஆஞ்சநேயர், தர்மபுரி தாஸ ஆஞ்சநேயர் கோவில் லாலாபேட்டை ஜய ஆஞ்சநேயர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலையன் ஆஞ்சநேயர் கோவில், விழுப்புரம் மாவட்டம், பஞ்சவடீ ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்கள் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் வழிபாடு

இந்த கோவில்களில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கோயில்களில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க: மார்கழி மாதம் அமாவாசை.. இந்த 5 தவறுகள் செய்தால் பாவம் சேரும்!

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?