சென்னையில் அதிர்ச்சி: மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு…
Chennai Sub-Inspector death: சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மீது இருவர் தாக்குதல் நடத்தியதால், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக எழும்பூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் மரணம்
சென்னை ஜூலை 26: சென்னை எழும்பூரில் (Chennai Egmore) ஏற்பட்ட மதுபோதைய தகராறில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் (Special Sub-Inspector Rajaraman) மீது இருவர் கொடூரமாக தாக்கினர். வீடியோ கேம் விளையாடிய பின் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறியது. ராக்கி, அய்யப்பன் என்பவர்கள் ராஜாராமனை கீழே தள்ளி தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், முதலில் அப்பல்லோ மருத்துவமனையும், பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக எழும்பூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது நடந்த கொடூர தாக்குதல்
சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீசாரின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது நடந்த கொடூர தாக்குதலால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வருத்தகரமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜாராமன் (54), ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பில் இருந்தார். வார இறுதி நாட்களில் நண்பர்களை சந்திப்பது வழக்கமானவரான இவர், கடந்த 2025 ஜூலை 18-ம் தேதி எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ‘வீடியோ கேம்’ விளையாடிக்கொண்டிருந்தார்.
மதுபோதையில் இருந்ததாக தகவல்
அவருடன் இருந்த ராக்கி, அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விளையாட்டுக்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான தகராறாக மாறி, ராஜாராமன் மீது இருவரும் தாக்குதல் நடத்தினர். அவரை கீழே தள்ளி தாக்கியதால், அவரது தலையில் ஆபத்தான காயம் ஏற்பட்டது.
மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை அருகிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ராக்கி மற்றும் அய்யப்பனை விசாரித்து வருகின்றனர். போலீசாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் இவ்வாறு மரணமடைந்ததைக் கடும் வருத்தத்துடன் காவல் துறை எதிர்கொண்டுள்ளது.
Also Read: ரிதன்யா வழக்கு: கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்த ஐகோர்ட்..!
சேலத்தில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
சேலத்தில் மதுபோதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடையில் மது அருந்திய பிரமோத் ராஜ், நரேன், சதீஷ் ஆகிய மூவரும் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, எஸ்ஐ சேகரை அவர்கள் தாக்கினர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்ட எஸ்ஐ சேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குற்றவாளிகளில் ஒருவரான பிரமோத் ராஜின் தந்தை, காவல்துறையில் எஸ்எஸ்ஐ-யாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.