அம்மா உணவகங்களின் நிலை என்ன? கேள்வி எழுப்பிய வேலுமணி… திமுக அமைச்சருடன் காரசார விவாதம்
Social Media Ban Plan : கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான திட்டங்களின் திட்டங்களில் ஒன்றான அம்மா உணவக திட்டம், தற்போதைய திமுக ஆட்சியில் நலிவடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

மாதிரி புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 18 : கடந்த அதிமுக (ADMK) ஆட்சியில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான திட்டங்களின் திட்டங்களில் ஒன்றான அம்மா உணவக திட்டம், தற்போதைய திமுக ஆட்சியில் நலிவடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் பிப்ரவரி 18, 2026 அன்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திடங்களில் ஒன்று அம்மா உணவகம். இந்த திட்டம் மிக குறைந்த விலையில் எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கி வருகிறது. பலதரப்பட்ட மக்கள் இந்த திட்டத்தால் பயனைடைந்து வருகின்றனர்.
குறிப்பாக அன்றாடம் உழைக்கும் மக்கள், பெருநகரங்களில் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இந்த திட்டம் மிகப்பெரும் வரப்பிராசதமாக இருந்து வந்தது. இந்த திட்டத்தால் எளிய மக்கள் பெரிய அளவில் பயனடைந்தனர். இந்த திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்பு போலவே தொடரப்படும் என அறிவிக்கப்பட்டாலும் நாளடைவில் இந்த திட்டம் நலிவடைந்து வருவதாக குற்றம்சாட்டினர்.
இதையும் படிக்க : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!
இந்த நிலையில் கொரோனா காலத்தில் இந்த திட்டம் சரிவர செயல்படவில்லை என கூறப்பட்டது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகங்களுக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை என்றும், சில இடங்களில் அம்மா உணவகம் மூடப்பட்டதாகவும், செயல்பாட்டில் இருக்கும் அம்மா உணவகங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
அம்மா உணவகங்களின் நிலை என்ன ?
இருப்பினும் தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சியில் 349 அம்மா உணவகங்கள் சீரமைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிமுக தரப்பில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவங்களின் நிலை மோசமடைந்து வருவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 18, 2026 அன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மா உணவகங்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, அம்மா உணவகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிதிகளில் இருந்து தான் அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மேலும், அம்மா உணவகத்தில் பணிபுரிந்த ஒருவரை கூட பணி நீக்கம் செய்யவில்லை என்று அவர் பதிலளித்தார்.