ஆயுத பூஜை, தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நாளை முன்பதிவு தொடக்கம்..
Special Trains For Diwali: பண்டிகை நாட்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 17, 2025) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

கோப்பு புகைப்படம்
செப்டம்பர் 16, 2025: பண்டிகை நாட்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே தரப்பில் 60 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருவார்கள். இதற்காக பேருந்து அல்லது ரயில் மூலம் பெரும்பாலானவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், மக்களின் வசதிக்காக மாநில போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்வது போல, ரயில்வே தரப்பிலும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், அக்டோபர் 1, 2025 அன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதேபோல், அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஒரு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில்
நாகர்கோவிலில் இருந்து 2025 செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். தாம்பரத்திலிருந்து 2025 செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து 2025 செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். போத்தனூரில் இருந்து 2025 செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3:15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மேலும் படிக்க: ரூட்டை மாத்தும் விஜய்.. பிரச்சார பயணத்தில் மாற்றம்.. இனி இப்படி தான் இருக்கும்
சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து 2025 செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:30 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். செங்கோட்டையிலிருந்து 2025 செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து 2025 செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். திருநெல்வேலியில் இருந்து 2025 செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1:30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தூத்துக்குடி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்
தூத்துக்குடியில் இருந்து 2025 செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து 2025 செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11:15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்
நாகர்கோவிலில் இருந்து 2025 செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து 2025 அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 4:15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 8:30 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு 2025 செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.