லீவு முடிந்து சென்னை போறீங்களா? சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க

Chennai Special Trains : பண்டிகை விடுமுறை, காலாண்டு விடுமுறையை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் பயணிகளுக்கான தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நெல்லை, மதுரையில் இருந்து 2025 அக்டோபர் 5ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவு முடிந்து சென்னை போறீங்களா? சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க

சிறப்பு ரயில்கள்

Updated On: 

04 Oct 2025 08:28 AM

 IST

சென்னை, அக்டோபர் 04 : பண்டிகை விடுமுறை, காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கான முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் 2025 அக்டோபர் 5ஆம் தேதியான நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதே போல, ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா திருவிழா என தொடர்ச்சியாக பண்டிகை நாட்களும் இருந்தன. இதனால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகளும் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

2025 அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மக்கள் சென்னை திரும்புகின்றனர். 2025 அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று முதல் சென்னை மக்கள் படையெடுக்க தொடங்கினர். ரயில்கள், பேருந்துகளில் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டனர். ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பயணிகளுக்காக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நெல்லை, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : குலசை தசரா திருவிழா… சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கிருந்து தெரியுமா?

சிறப்பு ரயில்கள் இயக்கம்


அதன்படி, திருநெல்வேலி – தாம்பரம் இடையே முன்பதில்லா விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. 2025 அக்டோபர் 5ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரயிலில் 11 நாற்காலி பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு பொது பெட்டிகள் உள்ளன. இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஒரு மாதம் டைம்.. செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு காலக்கெடு.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மேலும், சென்னை – மதுரை இடையே மெமு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 4ஆம் தேதியான இன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அக்டோபர் 5ஆம் தேதி மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, காலை 6 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடைகிறது. இந்த ரயில் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவேரூம்பூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.