மதுரையில் கோர விபத்து… சாலையை கடக்கு முயன்ற 4 பேர்.. கார் மோதி துடிதுடித்து பலி!
Madurai Road Accident : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற 7 பேர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

மதுரை, மே 25 : மதுரை மாவட்டத்தில் சாலையை (madurai road accident) கடக்க முயன்ற 4 பேர் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இந்த விபத்து கோர விபத்து நடந்துள்ளது. மதுரை மாவட்டம் பேசியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த 7 பேர் 2025 மே 25ஆம் தேதியான நேற்று இரவு உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து பேருந்தில் ஏறி சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதனை அடுத்து, குஞ்சாம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கிய 7 பேர், அங்கிருந்து மதுரை – தேனி சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அவ்வழியில் அதிகவேமாக வந்த கார் ஒன்று அவர்கள் 7 பேர் பயங்கரமாக மோதியது.
கார் மோதியில் 7 பேர் பலி
இதில் அவர்கள் 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதனை அடுத்து, அந்த காரை ஒட்டி வைத்த டிரைவர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உசிலம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் 7 பேர் கிடந்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் 7 பேரை யும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், 4 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறினார். இதனை அடுத்து, ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். இதனை அடுத்து, உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டிச் செல்வி (28), லட்சுமி (55), ஜோதிகா (20), ஆண் குழந்தை பிரகலாதன் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயபாண்டி, கருபாயி மற்றும் கவியாழினி (1) ஆகிய மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 பேர் மீது மோதிய காரை ஒட்டிவந்த நபர், ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 2025 மே 23ஆம் தேதி தஞ்சையில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் டெம்போவும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேம்பாலத்தில் ஒற்றைப் பாதையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்தும், டெம்போவும் மோதியதில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.