முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி.. உணவு பரிமாறிய மேயர் பிரியா..

Sanitization Workers Rally: சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் பேராடி வந்த நிலையில் அவர்களுகு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் மண்டலம் 6ல் பேரணி நடத்தினர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி.. உணவு பரிமாறிய மேயர் பிரியா..

தூய்மை பணியாளர்கள் பேரணி

Published: 

15 Aug 2025 13:44 PM

சென்னை, ஆகஸ்ட் 15, 2025: தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் தூய்மை பணியாளர்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2025 ஜூலை மாதம் மண்டலம் 5 மற்றும் மண்டலம் 6ல் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டனர். இதனை கண்டித்து சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1, 2025ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பணி நிரந்தரம் மற்றும் தனியார் மையமாக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

13 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தில் இறுதியில் தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது அனுமதிக்கப்படாத இடத்தில் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வந்ததன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இரவோடு இரவாக தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தரப்பினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மேலும் படிக்க: கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்:

தூய்மை பணியாளர்கள் போராட்டம் பெரும் பேசும் விஷயமாக மாறிய நிலையில் தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு ஆறு சிறப்பு திட்டங்களை அறிவித்தனர். குறிப்பாக

  • தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு
  • தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
  • தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு சுய தொழில் உதவித்தொகை
  • தூய்மை பணியாளர்களின் நல்வாழ்வுக்காக 10 லட்சம் ரூபாய் காப்பீடு
  • தூய்மை பணியாளர்களுக்கு 30000 வீடுகள் அல்லது குடியிருப்புகள்
  • பணியின் போது தூய்மை பணியாளர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் அவர்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி
  • தூய்மை பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் என சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேரணி:


இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 2025 தேதியான இன்று, திரு வி கா நகர் மண்டலம் 76 வது வட்டத்தில் உள்ள சந்திர யோகி சமாதி சாலையில் ஆறாவது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்று கூடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர். இந்த பேரணியின் இறுதியில் அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அதாவது அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா அவர்களுக்கு உணவு பரிமாறினர்.