பருவம் தவறிய மழை.. விவசாயிகளை காப்பாற்ற ரூ.290 கோடி நிவாரணம்.. தமிழக அரசு அறிவிப்பு

Rs.290 crore relief fund for farmers: வடகிழக்கு பருவமழை காலமான 2024 நவம்பர், டிசம்பர் மற்றும் 2025 ஜனவரி மாதங்களில் பெய்த மழையால், 5.66 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்தது. இதில் 4.90 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் மற்றும் 76,132 ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்கள் இடம்பெறுகின்றன.

பருவம் தவறிய மழை.. விவசாயிகளை காப்பாற்ற ரூ.290 கோடி நிவாரணம்.. தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப் புகைப்படம்

Updated On: 

25 Dec 2025 14:41 PM

 IST

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க, தமிழக அரசு பெரிய அளவில் நிவாரண உதவியை அறிவித்துள்ளது. மொத்தம் சுமார் 3.5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.289.63 கோடி நிதி வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா புயல்’ காரணமாக மட்டும், திருச்சி மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் பயிர்கள் சேதமடைந்திருந்தன. இது மொத்த சாகுபடி பரப்பளவில் சுமார் 11 சதவீதம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை காரணமாக 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க: வகுப்பறைக்குள் புகுந்த ஆசிரியைக்கு அடி, உதை.. முன்னாள் மாணவர் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!

மொத்தம் 5.66 லட்சம் ஏக்கர் சேதம்:

இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய காலங்களில், அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைகள் இணைந்து ஆய்வு நடத்தி, 33 சதவீதத்திற்கும் அதிக சேதம் ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகங்களின் பரிந்துரையின் பேரில், இந்த நிதி ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி, வடகிழக்கு பருவமழை காலமான 2024 நவம்பர், டிசம்பர் மற்றும் 2025 ஜனவரி மாதங்களில் பெய்த மழையால், 5.66 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்தது. இதில் 4.90 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் மற்றும் 76,132 ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்கள் இடம்பெறுகின்றன.

33%க்கும் மேல் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 (ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.8,086) நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கெனவே, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக, டிசம்பர் 1ஆம் தேதி முதல், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து கள ஆய்வு செய்து வந்தனர். இந்த ஆய்வின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க: இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி நிதி:

இதன் அடிப்படையில், சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு ரூ.254.38 கோடி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.35.25 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதோடு, இயற்கை பேரிடர் நேரங்களில் விவசாயிகளை காக்கும் பொறுப்புடன் அரசு தொடர்ந்து செயல் செய்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..