நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

Tn govt filed Case in Supreme Court: நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவுக்கு இவ்விவகாரம் பெரும் தலைவலியாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

உச்சநீதிமன்றம்

Updated On: 

16 Nov 2025 07:18 AM

 IST

சென்னை, நவம்பர் 16: நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாக நீட் விலக்கு என்று கூறியிருந்தது. 5 ஆண்டுகளும் நிறைவுக்கு வந்துவிட்டது. ஆனால், நீட் விலக்கு என்பது தமிழகத்தில் சாத்தியமாகவில்லை. அதேசமயம், தமிழக அரசு தரப்பில் ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், நீட் விலக்கு மசோதா மீதான ஒப்புதலை குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்ட விரோதமானது. குடியரசுத் தலைவரது இந்த நடவடிக்​கையை ரத்து செய்து நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளித்​த​தாக அறிவிக்க வேண்​டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இனி தள்ளுவண்டி கடைகளுக்கும் உரிமம் கட்டாயம் – வெளியான முக்கிய அறிவிப்பு – எப்படி பெறுவது?

மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட்:

தமிழக மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.13ம் தேதி சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் 5 மாதம் கழித்து திருப்பி அனுப்பி விட்டார்.

இதையடுத்து, சட்டமன்றத்தில் மீண்டும் இந்த சட்ட முன் வடிவு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்கு பிறகு மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் தராமல் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.

நீட் மசோதாவை நிராகரித்த குடியரசுத் தலைவர்:

குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மார்ச் 3ம் தேதி நிராகரித்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை உள்துறை அமைச்சகம் ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலை ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

மேலும் படிக்க: தவெக மாநில அளவில் போராட்டம் அறிவிப்பு – விஜய் பங்கேற்பாரா?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் விலக்கு மசோதா மீதான ஒப்புதலை குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்ட விரோதமானது. குடியரசுத் தலை​வரது இந்த நடவடிக்​கையை ரத்து செய்து நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளித்​த​தாக அறிவிக்க வேண்​டும் அல்லது மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 254 கீழ் மசோதாவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.