AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ramapuram Metro Accident : ராமாபுரம் மெட்ரோ விபத்து.. L&T நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம்!

Ramapuram Metro Collapse | சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ பணியின் போது கான்கிரீட் விழுந்து விபத்துக்குள்ளானதில் ரமேஷ் எனபவர் சம்பவ இடத்திலே உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குநரகம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், கட்டுமான நிறுவனமான L&T-க்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Ramapuram Metro Accident : ராமாபுரம் மெட்ரோ விபத்து.. L&T நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம்!
ராமாபுரம் மெட்ரோ விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Jun 2025 07:51 AM IST

சென்னை, ஜூன் 19 : சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ (Chennai Ramapuram Metro Accident) கான்கிரீட் விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், மெட்ரோ கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் L&T  நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ கான்கிரீட் விழுந்த விபத்தில் ரமேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், விசாரணை மேற்கொண்ட மெட்ரோ ரயில் திட்ட இயக்குநரகம் (Director of Metro Rail Project) விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், L&T நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மெட்ரோ கான்கிரீட் விழுந்து விபத்து  – ஒருவர் பலி

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போரூர், கிண்டி ஆகிய வழி தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஜூன் 12, 2025 அன்று போரூர் ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதை பணியின் போது இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மெட்ரோ விபத்து

L&T  நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் – அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில் ராமாபுரம் மெட்ரோ கான்கிரீட் விழுந்த விபத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் L&T  நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கவனக்குறைவாக பணியாற்றிய நான்கு பொறியாளர்கள் மெட்ரோ திட்டப் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் தலைமையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us