Cyclone Montha : மோன்தா புயலின் தாக்கம்… இந்த 11 மாவட்டங்களில் மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Heavy Rain Alert : மோன்தா புயல் அக்டோபர் 28, 2025 அன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல் (Cyclone Montha), அக்டோபர் 28, 2025 அன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த மோன்தா புயல் மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஆந்திரா (Andhra Pradesh) மாநிலத்தின் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, ஒடிஷா மற்றும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
11 மாவட்டங்களில் கனமழை
மோன்தா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர் உட்பட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தென்காசி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
ஆந்திரா கடற்கரை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை எண் உயர்வு
மோன்தா புயலின் தீவிரம் அதிகரித்துள்ளதால், ஆந்திரா கடற்கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை எண்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆந்திரா காக்கிநாடா துறைமுகத்தில் எச்சரிக்கை எண் 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் அபாயத்தைக் குறிக்கிறது. விசாகப்பட்டணம் மற்றும் கங்காவரம் துறைமுகங்களில் எச்சரிக்கை எண் 6 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மச்சிலிபட்டணம் மற்றும் நிசாம் துறைமுகங்களில் எச்சரிக்கை எண் 5 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க : Montha Cyclone: திருவள்ளூரில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை!!
வட சென்னையில் அதிகரித்திருக்கும் மழை
மோன்தா புயலின் விளைவாக, சென்னையில் அக்டோபர் 27, 2025 மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, அக்டோபர் 27, 2025 காலை 5.30 மணி முதல் அக்டோபர் 28, 2025 அன்று காலை 5.30 மணி வரை, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ மழையும், விம்கோ நகர் பகுதியில் 8 செ.மீ மழையும், மணலி, மாதவரம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பகுதியாகியுள்ளது.