கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியுள்ளேன்.. சிபிஐ விசாரணை குறித்து செந்தில் பாலாஜி பேச்சு!

Ex Minister Senthil Balaji On CBI Investigation | தவெக கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான நேற்று (மார்ச் 17, 2026) டெல்லியில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில், இன்று அது குறித்து அவர் பேசியுள்ளார்.

கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியுள்ளேன்.. சிபிஐ விசாரணை குறித்து செந்தில் பாலாஜி பேச்சு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

Published: 

18 Mar 2026 11:35 AM

 IST

சென்னை, மார்ச் 18 : கரூரில் (Karur) 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK – Tamilaga Vettri Kazhagam) கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வேகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (மார்ச் 17, 2026) விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிபிஐயிடம் முறையான பதிலை வழங்கியுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த நிலையில், சிபிஐ விசாரணை குறித்து செந்தில் பாலாஜி கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிபிஐ விசாரணைக்கு ஆஜரான செந்தில் பாலாஜி

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ முன்பு ஆஜராக மார்ச் 09, 2026 அன்று செந்தில் பாலாஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் அன்று சிபிஐ முன்பு ஆஜராகாத நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை, மாலை 5 மணி வரை நீடித்தது. மொத்தமாக சுமார்  6 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : சுட்டெரிக்கும் வெயில்.. வாகன ஓட்டிகளுக்காக சென்னையில் 40 சிக்னல்களில் பசுமை பந்தல்கள்!

கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியுள்ளேன் – செந்தில் பாலாஜி

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், சென்னை திரும்பிய செந்தில் பாலாஜியிடம் அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவற்றுக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, செப்டம்பர் 27, 2026 அன்று கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் சில கேள்விகளை முன் வைத்தனர். அந்த கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியுள்ளேன்.

இதையும் படிங்க : தவெகவுக்கு கூட்டணி தூது விட்ட பாஜக தலைமை? க்ரீன் சிக்னல் காட்டவிருந்த விஜய்… திடீரென பின்வாங்க காரணம் என்ன!

குறிப்பாக சாட்சிகள் என்ற அடிப்படையில் அன்று நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்விகளை முன் வைத்தனர். அந்த கேள்விகளுக்கு என்ன பதில் கூறினேன் என்பதை பொதுவெளியில் சொன்னால் சரியாக இருக்காது. முறையான கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியிருக்கிறேன். சிபிஐ அதிகாரிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்திருக்கலாம், அதன் அடிப்படையில் அவர்கள் என்னை அழைத்திருக்கலாம். அங்கு களத்தில் இருந்து பணியாற்றியதன் அடிப்படையில், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில்களை வங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்