தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..

Pregnant woman death; தங்களது பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே, ரம்யாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்ததும், கண்ணனுக்கு அது என்ன குழந்தையாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..

மாதிரிப் படம்

Updated On: 

12 Dec 2025 08:34 AM

 IST

தருமபுரி, டிசம்பர் 12: தருமபுரி அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்குகளை முடித்து அவரை அடக்கம் செய்துள்ளனர். இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் கணவர் நடவடிக்கைகள் மீது பெண்ணின் குடும்பத்தினருக்கு திடீரென சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அவரிடம் இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். ஆனால், அவர்களின் கேள்விக்கு அவர் முன்னுக்கு பின், முரணாக பதிலளித்துள்ளார். இதனால், கூடுதல் சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி, என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்.. உணவு குழாயில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சோகம்!!

தருமபுரி மாவட்டம் பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து, திருமணத்திற்கு பின் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இங்கு தான் பிரச்சனை தொடங்கியுள்ளது. அதாவது, கண்ணன் தனக்கு வாரிசாக ஆண் குழந்தை வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார். இந்நிலையில், ரம்யா சமீபத்தில் மீண்டும் கர்ப்பமாகியிருந்தார். தொடர்ந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த குழந்தையை மகிழ்ச்சியாக வரவேற்க தயாராக இருந்தனர்.

தவறி விழுந்து உயிரிழந்த ரம்யா:

இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 1 ஆம் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கண்ணன் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் அதனை நம்பியதோடு, சோகத்துடன் அவருக்கான இறுதிசடங்குகளை செய்து வழி அனுப்பி வைத்தனர். எனினும், அவர்களுக்கு கண்ணன் மீது லேசான சந்தேகம் எழுந்துள்ளது.

இறப்பு குறித்து போலீசில் புகார்:

இதையடுத்து, தங்களது பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதலில் போலீசாரையும் நடந்தது விபத்து என்பது போலவே கண்ணன் நம்ப வைத்துள்ளார். எனினும், அவரது பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, தங்களது பானியில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதில், தான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே, ரம்யாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்ததும், கண்ணனுக்கு அது என்ன குழந்தையாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. இதனால், தனியார் ஸ்கேன் மூலம் சட்டவிரோதமாக பரிசோதனை செய்து வயிற்றில் உள்ளது என்ன குழந்தை என்பதை அவர் அறிந்துள்ளார். அதன்படி, வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்த கண்ணன் மனமுடைந்துள்ளார்.

கருகலைப்பில் நடந்த விபரீதம்:

இதனால், பிறக்கவிருக்கும் குழந்தையை ஏற்க கண்ணன் விரும்பவில்லை. இதனால், கருகலைப்பு செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக சேலத்தை சேர்ந்த செவிலியர் சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களும், கண்ணனின் வீட்டில் வைத்தே கருகலைப்பு செய்துவிடலாம் என்று கூறியுள்ளனர். அதன்படி, வீட்டில் வைத்து அவர்கள் கருகலைப்பு செய்தபோது, ரம்யாவின் உடல்நிலை திடீரென மிக மோசமடைந்து, அவர் உயிரிழந்தள்ளார். இதனை மறைக்கவே, ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கண்ணன் நாடகமாடி, அனைவரையும் நம்ப வைத்துள்ளார். எனினும், பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் தாமதமாக தற்போது சிக்கியுள்ளார்.

இதையும் படிக்க : மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!

இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செவிலியர் சுகன்யா, புரோக்கர் வனிதா, மற்றும் முக்கிய காரணமான ரம்யாவின் கணவன் கண்ணன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, தனியார் ஸ்கேன் சென்டர் குறித்த தகவலை பெற்று, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நோயால் பாதிக்கப்பட்ட எறும்புகளின் ஆச்சரியமூட்டும் செயல்.. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..
ஒரு மணி நேர கணவர் சேவை.... ஆண்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் - எங்கு தெரியுமா?
19,000 டாலர் மதிப்புள்ள முட்டைகளை முழுங்கிய நபர்.. நியுசிலாந்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..
நானும் வீட்டுக்கு போகனும்... மன்னிப்புக்கேட்ட இண்டிகோ பைலட்